ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஞானி : ஜெ. வழக்கில் உள்ள கம்பெனிகளின் இயக்குநராக இருந்த "சோ"வை ஏன் விசாரிக்கவில்லை?-

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களின் இயக்குநராக இருந்த பத்திரிகையாளர் சோ ராமசாமி ஏன் விசாரிக்கப்படவில்லை என்று பத்திரிகையாளர் ஞாநி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ஞாநி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து: ஜெ. வழக்கில் உள்ள கம்பெனிகளின் இயக்குநராக இருந்த ஜெயலலிதாவின் பினாமிகளாக சசிகலாவும் இளவரசியும் பல கம்பெனிகளை நடத்தினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சொத்து குவிப்பு வழக்கில் ஏன் அந்த கம்பெனிகளின் இயக்குநராகப் பணியாற்றிய சோ ராமசாமியை விசாரிக்கவில்லை என்று யாருக்காவது தெரியுமா? இவ்வாறு ஞாநி பதிவிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட போது இடைக்காலத்தில் சர்ச்சைக்குரிய கம்பெனிகளின் நிர்வாக இயக்குநராக சோ ராமசாமி இருந்தார் என்பதற்கான ஆதாரங்களை சில மாதங்கள் முன்பு பத்திரிகையாளர் ஞாநி வெளியிட்டிருந்தார். மேலும் ஆலந்தூர் சட்டசபை இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ஞாநி என்பதும் குறிப்பிடத்தக்கது.
/tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: