செவ்வாய், 30 செப்டம்பர், 2014

கர்நாடகாவில் பெண் அர்ச்சகர்கள் நியமிக்க படுவார்கள் ! முதல்வர் சித்தராமையா அறிவிப்பு !

கர்நாடக கோவில்களில் பூஜை செய்ய பெண்அர்ச்சகர்களை நியமிக்க பரிசீலனை செய்யப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா பேசினார். தசரா விழா< மங்களூரில் உள்ள புகழ் பெற்ற குத்ரோலி கோகார்நாதேஸ்வரா கோவிலில் தசரா விழாவை முதல்-மந்திரி சித்தராமையா நேற்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் பூஜை செய்வதற்காக பெண்களை நியமிக்க அரசு பரிசீலிக்கும். அரசின் இந்த முடிவுக்கு பக்தர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன். வருங்காலங்களில் மங்களூர் தசரா விழா மைசூர் தசராவிழா போல் முக்கியத்துவம் பெறும் என்று நம்புகிறேன்.


சமுதாய புரட்சி

அன்பு பரஸ்பர நம்பிக்கையுடன் நாம் வாழ வேண்டும். சமுதாயத்தில் ஒற்றுமையை வளர்க்க அனைவரும் பாடுபட வேண்டும்.கேரளாவை சோந்த சமூக சீர்திருத்தவாதியான நாராயண குரு 1912-ல் குத்ரோலி கோவிலில் தீண்டாமைக்கு எதிராக சபதம் எடுத்தார். அப்போது தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். சமுதாய புரட்சி கேரளாவில் இருந்து தொடங்கியது. அனைத்து சமதாயத்தினரும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.’’

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.

விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ஜனார்த்தன பூஜாரி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், கர்நாடக மந்திரிகள் ரமாநாத் ராய், யு.டி.காதர், வினய் குமார் சொரகே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தசரா விழா வருகிற 4-ந் தேதி வரை நடக்கிறது. dailythanthi.com

கருத்துகள் இல்லை: