ஒரு பாடலுக்கு மட்டும் ஆட மாட்டேன் என்றார் ஐஸ்வர்யா.‘ரம்மி,
‘பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா.
அவர் கூறியதாவது:கிராமத்து பெண்ணாகவே நடிப்பது ஏன் என்கிறார்கள். எனக்கு
வரும் கதாபாத்திரங்கள் ஒரே சாயலில் வருகிறது. அதை ஏற்று நடித்து வருகிறேன்.
நிறைய படங்களில் இதுபோல் செய்துவிட்டதால் இடைவெளிவிட்டு நடிக்க எண்ணி
இருந்தேன்.
அப்போதுதான் ‘திருடன் போலீஸ் படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஏற்றேன். அதைத்தொடர்ந்து ‘இடம் பொருள் ஏவல் படத்தில் விஷ்ணு ஜோடியாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதுவித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் இதுபற்றி அதிகம் கூற முடியாது. தமிழ் சினிமாவில் இதுபோல் ஒரு கதாபாத்திரம் இதற்கு முன் வந்ததில்லை. கிளாமர் வேடங்களிலும் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். அத்தகைய வேடம்தான் எனக்கு வேண்டும். ஆனால் ஆபாசமாக நடிக்க மாட்டேன். ஒருபோதும் ஐட்டம் டான்ஸ் எனப்படும் ஒரு பாடலுக்கு நடனம் ஆட மாட்டேன்.இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார் tamilmurasu.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக