சீரியஸாக இருபதற்கு பெரும்பாலோர் கவனமாக இருத்தல் என்ற பொருளை கொண்டுள்ளனர் .
எந்த விடயத்திலும் தேவை படும் அளவில் கவனமாக இருக்கிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு எதிலும் மகா சீரியஸாக இருப்பதைதான் நான் இங்கு குறிப்பிட வருகிறேன்,
அதிலும் குறிப்பாக நான் சார்ந்த மக்களின் ஜனத்தொகையில் கணிசமானோர் பெரும்பாலும் பொல்லாத சீரியஸ் பிராணிகள்தான் .
படிப்பதிலே கவனம் சாமி கும்பிடுவதில் கவனம் உழைப்பதில் கவனம் பிறரோடு பழகுவதில் கவனம் சம்பாதித்த காசை சொத்துக்களை சேமித்து வைப்பதில் கவனம் என எதிலும் கவனம் கவனம் கவனம்தான் ,
இது நல்ல பழக்கம் தானே இதில் என்ன குறை கண்டீர் என்று நீங்கள் வினாவகூடும் , உண்மைதான் , எமது கருமத்தில் கவனமாக இருத்தல் நல்லதுதான் அது அவசியமானதும் கூட,
ஆனால் இங்கே நான் குறிப்பிடும் கவனம் என்பது அளவுக்கு அதிகமான பய உணர்வுடன் சதா விசனத்தோடு இருப்பதாகும். ,
இந்த கவனம் என்பது விசனமாக மாறினால் , அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்ற பழமொழியாகி விடும் ,
எது எமக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று பயபடுகிறோமோ அதன் மீது மிகவும் கவனமாக சிரத்தையோடு எமது மனதை செலுத்துகிறோம் ,
கிடைக்காமல் போய்விடுமோ என்று சதா பயந்தால் அது கிடைக்காமலே போய்விட கூடிய வாய்ப்புகளே அதிகம் ,
உங்களை நோக்கி வரும் தோல்விகளுக்கு உயிர் கொடுப்பது உங்கள் பயம்தான் , அந்த பயத்தின் அழகான ஒரு முக மூடியாக இருப்பது இந்த அதீத கவனம் / விசனம் / சீரியஸ்னஸ் போன்ற எதிர்மறை எண்ணங்களே
எம்மை அறியாமலேயே ஒருவித பயம் நிரந்தரமாக எம்முள் வேரூன்றி இருப்பது மிகவும் எதிர்மறையான / நெகடிவ் சமாசாரமாகும்.
எவ்வளவு நாம் சதா கவனம் மிக்கவர்களாக காட்சி அளிக்கிறோமோ அவ்வளவு தூரம் நாம் எதிர்மறை உணர்வுகளுக்கு இடங்கொடுத்து விட்டோம் என்றுதான் பொருள்.
நாம் விசுவாசமானவர்கள் அல்லது நேர்மையானவர்கள் என்று காட்டி கொள்வதற்காக மிகவும் சீரியஸாக முகத்தை வைத்து கொண்டு காட்சி அளிக்க பழகிவிட்டோம் . அதிலும் பெரிய மனிதர்கள் என்ற அந்தஸ்தை எட்டி விட்டவர்கள்தான் பெரிதும் இந்த விசன நோயால் பாதிக்க பட்டுள்ளார்கள்.
பொது இடங்களில் கூட பல மணிநேரங்கள் எப்படித்தான் கடுகடுத்த முகத்தோடு வாயை இறுக்கி மூடிக்கொண்டு இருக்க முடிகிறதோ தெரியவில்லை .
பார்வையிலும் ஒரு சிடு சிடுப்பு , சிரிக்க தெரியாத வாய் ,இப்படிபட்டவர்கள் அனேகமாக மேல்தட்டு அல்லது நடுத்தர வர்க்கத்தினரிடையே தான் அதிகமாக காணப்படுகிறார்கள் , இது உண்மையில் ஒரு தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுதான் ,
அப்படி என்னதான் சீரியசோ சின்சியரோ யானறியேன்,
சிரிக்க மறந்த மனிதர்களின் மனைவி கணவன் அல்லது காதலன் காதலி போன்றோர் மிகவும் பரிதாபதிற்கு உரியவர்கள் .
சீரியஸ் மனோபாவத்தில் ஊறிய முகத்தில் இனிமை என்பதே இருக்காது,
ஆனால் இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் இந்த சீரியஸ் பிராணிகள் பலரும் தங்களது சீரியஸ்னஸ் அதை தங்களது அந்தஸ்தின் சின்னமாக எண்ணி கொண்டிருக்கிறார்கள் .
தாங்கள் எவ்வளவு தூரம் பெரிய மனிதர்கள் என்று காட்சி அளிக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் முகத்தை இறுக்கமாக வைத்திருக்க வேண்டும் என்ற தவறான பாடத்தை படித்து விட்டார்கள். ?
சிரித்த முகம் வெற்றியின் சின்னம் , சீரியஸ்னஸ் என்பது தோல்வியின் பிரகடனமாகும் எங்கே நாம் நினைப்பது நடக்காமல் போய்விடுமோ என்று பயப்படும் போதுதான் இந்த அதீத கவனம் விசனம் போன்ற உணர்வுகள் மேலெழும் , அப்போதே உங்கள் தோல்வியை நீங்களே தயாரிக்க தொடங்கி விடுகிறீர்கள்.
ஏனெனில் எமது உணர்வுகள் முகவும் சக்தி வாய்ந்தவை , அவை செயலுருவாகும் தன்மை கொண்டவையாகும் ,
மனதிலும் முகத்திலும் ஆனந்த இருந்தால் நடக்கும் கருமங்கள் எல்லாம் ஆனந்தமாக நடைபெறும் .
Never misunderstand seriousness for sincerity. Sincerity is very playful, never serious. It is true, authentic, but never serious. Sincerity does not have a long face, it is bubbling with joy, radiating with an inner joyousness.
பயத்தின் வேறொரு முகம்தான் நிரந்தர சீரியஸ்னஸ் , இது நிச்சயம் தோல்வியின் சமிக்ஞைதான் ,
பயம் மிகவும் சக்தி வாய்ந்த உணர்ச்சியாகும் .
நாம் எதை எண்ணி பயப்படுகிறோமோ அது எம்மை நோக்கி வரும் .
இந்த எதிலும் கவனம் எப்போதும் கவனம் என்ற சீரியஸ்னஸ் வியாதி முற்று முழுதாக பயத்தினால் உருவான ஒரு பயங்கர நோயாகும்
மனிதர்களின் மனித பண்புகள் எல்லாவற்றையும் அடியோடு இல்லாமல் செய்துவிடும் .
எதிலும் அதீத கவனம் நல்லது என்ற கோட்பாட்டில் நாம் இருப்பதால், நாம் எம்மை சுற்றி உள்ள இந்த அற்புத பிரபஞ்சத்தை அடிப்படையில் நம்பவில்லை என்றே ஆகிறது .
மனித சமுகத்திற்கு இந்த அதீத சீரியஸ் பேர்வழிகள் பெரும் கேடு விளைவித்து விடுவார்கள் .
இவர்களது பயம் கலந்த கவன உணர்வு சதா பிரச்சனைகளை நோக்கி ஈர்க்க பட்டு கொண்டே இருக்கும்,
இவர்களுக்கு சதா ஏதாவது ஒரு பிரச்சனை பற்றி சிந்தித்தே ஆகவேண்டு, ஒரு பிரச்சனையும் இல்லையென்றால் இவர்களின் வாழ்க்கை போர் அடித்துவிடும் ,
ஆகக்கூடி ஏதாவது வீதி விபத்துக்கள் ஆவது நடந்துள்ளதாக பத்திரிகைகளில் படித்தால் அல்லது டிவியில் பார்த்தாலோ மிகவும் நேரம் செலவழித்து அதைபற்றி அக்கு வேறு ஆணி வேராக ஆராய்ந்து விவாதிப்பார்கள்.
நாட்டில் ஒரு பிரச்னையும் இல்லையென்றால் இவர்களை பார்க்கவே பரிதாபமாக இருக்கும் , ஏதோ பறிகொடுத்தவர் போல உப்பு சப்பில்லாமல் காட்சி அளிப்பார்கள்.
பயம் நிறைந்த மனம் சதா பிரச்சனைகளில்தான் உயிர் வாழ்கிறது,
இவர்களுக்கு சிருஷ்டி உணர்வு மிகவும் குறைவாகவே இருக்கும் ,
ஊருக்கு காட்டுவதற்கு சிலர் இசை நடனம் போன்ற நுண் கலைகளில் நாட்டம் உள்ளவர்களாக காட்சி அளிக்கிரார்கள் .
ஆனால் உண்மையில் இப்படிபட்ட பயம் உள்ளவர்கள் ஒருபோதும் சிறந்த கலைஞர்களாகவோ ஒரு சிருஷ்டிகர்த்தாவாகவோ பரிணமிக்க முடியாது,
ஆனால் அடிப்படையில் நேர்மை போர்வையில் மறைந்திருக்கும் எதிர்மறையாளர்கள் சதா தங்களை பற்றி ஏதாவது கலை கலாசாரம் இசை அல்லது சமயம் சார்ந்த வேஷம் போன்றவற்றில் முனைப்போடு இருப்பார்கள்
ஏனெனில் அவர்களின் உள் உணர்வுக்கு தெரியும் தங்கள் ஒரு போலி Fake தான் என்பது,
தெரியாத புதிய ஒரு நாளை நோக்கி நடப்பது தான் வாழ்க்கை ,
ஏற்கனவே தெரிந்த கதையில் நடிப்பது வாழ்க்கை அல்ல .
உங்களை சுற்றி உள்ள பிரபஞ்சம் உங்களைவிட அறிவானது,
உங்களைவிட கவனமானது ,
உங்களை விட அன்பானது,
சகல ஜீவராசிகளுக்கும் உகந்த வாழும் இடமாக இந்த பூமி அமைந்திருக்கிறதே , அதை சற்று உற்று பார் ! உனக்கு எல்லாம் விளங்கும் ,
உன்னைவிட பலமடங்கு அறிவுள்ள ஜீவராசிகள் உன்னை சுற்றி இருப்பதை உணர்வாய் .
உண்மையில் நீ வெறும் டம்மி பீஸ்தான் . உலகத்தையே உன் தலையில் சுமப்பதாக எண்ணாதே ,
உண்மையில் உலகம்தான் உன்னை சுமக்கிறது ,
உன்னை சுற்றி உள்ள இந்த அற்புத உலகத்திற்கு நீ செய்யக்கூடிய சிறிய ஒரு நன்றி கடனாக இருக்கட்டும் , இனியாவது நன்றாக வாய்விட்டு சிரித்து பார் , radhamanohar.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக