சென்னை: சரவணபவன் ஹோட்டல்களின் அனைத்து சென்னை கிளைகளிலும் வருமான
வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னையில் புகழ்பெற்றது சரவணபவன் சைவ ஹோட்டல். சென்னையில் 20 இடங்களில்
மட்டுமின்றி பல்வேறு நகரங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இதற்கு கிளைகள்
உண்டு.
சரணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர்.
அத்துடன் சரவணபவன் ஹோட்டல்களில் வருமான வரி சோதனையும் அடிக்கடி நடைபெறும்.
இந்த நிலையில் இன்று அதிரடியாக சென்னையில் உள்ள அனைத்து சரவணபவன்
ஹோட்டல்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் சரவணபவன் ஹோட்டல் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களிலும் இந்த
சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை கே.கே. நகரில் உள்ள சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் வீட்டிலும்
வருமான வரித்துறை அதிகாரிகள் குழு முகாமிட்டு சோதனை நடத்தி வருகிறது.
மேலும் தூத்துகுடியில் உள்ள ராஜகோபாலின் பண்ணை வீட்டிலும் சோதனை நடப்பதாக
தகவல்கள் வெளியாகி உள்ளன< tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக