சென்னை: திமுகவின் தஞ்சாவூர் மாவட்ட செயலர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம்,
தருமபுரி மாவட்ட பொறுப்பாளர் முல்லைவேந்தன், தருமபுரி வடக்கு மாவட்ட
பொறுப்பாளர் இன்பசேகரன், மாநில விவசாய அணிச் செயலர் கே.பி. ராமலிங்கம்
எம்.பி, முல்லைவேந்தன் உள்ளிட்ட 33 திமுக நிர்வாகிகள் இன்று அக்கட்சியில்
இருந்து அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பென்ட்
செய்யப்பட்டுள்ள திமுக நிர்வாகிகள் ஒருவாரத்துக்குள் விளக்கம்
அளிக்காவிட்டால் கட்சியில் இருந்தே முழுமையாக நீக்கப்படுவர்கள் என்றும்
எச்சரிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து 6 பேர் கொண்ட
கட்சி சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரையில் திமுக
மாவட்டங்கள் 65 ஆக பிரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அடேங்கப்பா திமுகவில் அழகிரிக்கு இவ்வளவு செல்வாக்கா ? அஞ்சா நெஞ்சனை அண்டர் எஸ்டிமேட் பண்ணினது இவ்வளவு முட்டாள்தனம்னு தெரியல்லையே ?
இந்த நிலையில் தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்ட 33 நிர்வாகிகளை அதிரடியாக திமுக சஸ்பென்ட் செய்வதாக அறிவித்துள்ளது. யார் யார் சஸ்பென்ட்? திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும், மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களும் தேர்தலில் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தர வேண்டுமென்று கழகத் தலைமையினால் கேட்டுக் கொள்ளப்பட்டு - அவர்கள் தந்த அறிக்கைகளையும், மற்றும் கழக உறுப்பினர்கள் தந்த புகார் கடிதங்களையும் படித்தறிந்து, தவறு செய்தவர்கள் பற்றிய விவரங்களைக் கழகத் தலைமைக்கு பரிந்துரைக்க வேண்டுமென்று கூறப்பட்டதின் அடிப்படையில் - குழுவின் உறுப்பினர்களாக தலைமைக் கழகத்தினால் நியமிக்கப்பட்ட கலசப்பாக்கம் திருவேங்கடம், தங்கம் தென்னரசு ஆகிய இருவரும் கழகத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்துக் கடிதங்களையும் நன்றாக படித்தறிந்து தவறு செய்தவர்கள், கழகச் சட்டதிட்டத்திற்கு மாறாக நடந்து கொண்டவர்கள் யார் யார் என்று விவரமாகத் தந்துள்ள பரிந்துரைகளின்படி; திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதி 37 பிரிவு 4இன் படி, பின்வரும் பட்டியலிலே கண்டுள்ளவர்கள் தாங்கள் தற்போது வகிக்கும் பொறுப்புகள் அனைத்திலிருந்தும் தற்காலிகமாக விலக்கி வைக்கப் படுவதோடு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து முழுவதுமாக ஏன் நீக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தை விதி 37, பிரிவு 7இன்படி ஒரு வாரக்காலத் தவணைக்குள் கழகத் தலைமைக்குத் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு வாரக் காலத்திற்குள், அவர்கள் விளக்கம் தரத் தவறுவார்களானால், அவர்களிடம் விளக்கமளிக்க எதுவும் ஆதாரமில்லை என்று கருதப்பட்டு நேரடியாக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, கழகத்திலிருந்து முழுவதுமாக நீக்கப்படுவார்கள். ஒழுங்கு நடவடிக்கைக்கு உரியவர்கள். 1. திரு. எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாவட்டக் கழகச் செயலாளர், தஞ்சை மாவட்டம். 2. திரு. வ. முல்லைவேந்தன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி தெற்கு மாவட்டம். 3. திரு. பெ. இன்பசேகரன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி வடக்கு மாவட்டம். 4. திரு. சிட்டி முருகேசன், நகரக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி 5. திரு. சுந்தரம், நகரக் கழகச் செயலாளர், கவுண்டம்பாளையம், கோவை மாவட்டம். 6. திரு. தென்றல் செல்வராஜ், நகரக் கழகச் செயலாளர், பொள்ளாச்சி, கோவை மாவட்டம். 7. திரு. மகாராஜன், நகரக் கழகச் செயலாளர், துறையூர், திருச்சி மாவட்டம். 8. திரு. சீனி அண்ணாதுரை, நகரக் கழகச் செயலாளர், பட்டுக்கோட்டை, தஞ்சை மாவட்டம். 9. திரு. இராஜ பூபாலன், நகரக் கழகச் செயலாளர், மன்னார்குடி 10. முத்துக்குமாரசாமி, பேரூர் கழகச் செயலாளர், நத்தம், திண்டுக்கல் மாவட்டம். 11. திரு. ரவிச்சந்திரன், நங்கவள்ளி ஒன்றியக் கழகச் செயலாளர், 12. திரு. பாப்பாரப்பட்டி சுரேஷ்குமார், பனமரத்துப்பட்டி ஒன்றியக் கழகச் செயலாளர்,. 13. திரு. ஓமலூர் பரமன், ஓமலுhர் ஒன்றியக் கழகச் செயலாளர் 14. திரு. கே. பொன்னுச்சாமி, மொரப்பூர் ஒன்றியக் கழகச் செயலாளர். 15. திரு. ஆர். காசிவிசுவநாதன், மேச்சேரி ஒன்றியக் கழகச் செயலாளர். 16. திரு. க. கார்த்திகேயன், தியாகதுர்க்கம் ஒன்றியக் கழகச் செயலாளர். 17. திரு. தீ. சக்திவேல், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர். 18. திரு. பி. கணேசன், நாமக்கல் ஒன்றியக் கழகச் செயலாளர். 19. திரு. டி.பி. சுப்பிரமணியம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர். 20.திரு. இராஜமாணிக்கம், குடிமங்கலம் ஒன்றியக் கழகச் செயலாளர். 21. திரு. கோழிக்கடை கணேசன், வால்பாறை ஒன்றியக் கழகச் செயலாளர். 22. திரு. ஆனந்தன், மண்ணச்சநல்லூர் ஒன்றியக் கழகச் செயலாளர். 23. திரு. சோழன், முசிறி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர். 24. திரு. ஜெயபால், கடலூர் ஒன்றியக் கழகச் செயலாளர். 25. திரு. ஏனாதி பாலு, பட்டுக்கோட்டை ஒன்றியக் கழகச் செயலாளர். 26. திரு. தியாக இளங்கோ, ஒரத்தநாடு ஒன்றியக் கழகச் செயலாளர். 27. திரு. மாரியப்பன், பழனி ஒன்றியக் கழகச் செயலாளர். 28. திரு. ஓ. ராஜேந்திரன், வத்தலக்குண்டு ஒன்றியக் கழகச் செயலாளர். 29. திரு. சின்ராஜ், விருதுநகர் ஒன்றியக் கழகச் செயலாளர். 30. திரு. இராஜசேகர், கடலாடி ஒன்றியக் கழகச் செயலாளர். 31. திரு. கனகு (எ) கனகராஜ், மண்டபம் ஒன்றியக் கழகப் பொறுப்பாளர். 32. திரு. கே.பி. இராமலிங்கம், எம்.பி., மாநில விவசாய அணிச் செயலாளர். 33. திரு. எஸ்.எம். போஸ், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர், விருதுநகர். இவ்வாறு தி.மு.க. தலைமைக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக