ஞாயிறு, 15 ஜூன், 2014

சென்னை பெண் டாக்டர் கடத்தி கொலை !

பூந்தமல்லி: சென்னை முகப்பேர் ஏரித் திட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவி(69). இவரது மனைவி டாக்டர் மல்லிகா (65). இவர்கள் மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுப்பெற்றனர். ரவி ஆந்திராவில் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களது ஒரே மகள் ரோகிணி (30) நொளம்பூர் பகுதியில் தனியாக வசிக்கிறார். கடந்த 12ம் தேதி, திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு மல்லிகா சென்றார். அவருடன் வீட்டு வேலைக்கார பெண்  சத்யா (32) சென்றார். காரை ஆக்டிங் டிரைவர் கார்த்திக் (29) ஒட்டிச்சென்றார். பத்திரப்பதிவுக்கு சென்றவர்கள் நள்ளிரவு ஆகியும் வீட்டுக்கு வராததால் மல்லிகா செல்போனுக்கு ரோகிணி பேசியபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உறவினர், நண்பர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது மல்லிகாவை பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து ரோகிணி, நொளம்பூர் போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், மல்லிகா மற்றும் அவருடன் சென்றவர்களை தேடி வந்தனர். பத்திரப்பதிவு அலுவலகத் துக்கு போலீசார் தொடர்பு கொண்டு கேட்டபோது மல்லிகா என்பவர் நில பத்திரப்பதிவு செய்யவில்லை என்று தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இந்த நிலையில், விழுப்புரம் அருகே மயிலம் பகுதியில் ரோட்டோரம் உள்ள புதரில் ஒரு பெண் உடல் கிடப்பதாக நொளம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரோகிணியை அழைத்துக்கொண்டு போலீசார் அங்கு விரைந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்தது மல்லிகா என்று உறுதிப்படுத்தப்பட்டது. பின் அவரது சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


வேலைக்கார பெண் சத்யா, டிரைவர் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சென்னையில் பதுங்கி இருந்த சத்யாவை போலீசார் இன்று பிடித்து விசாரித்தனர். சத்யா, ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்துள்ளார். கார்த்திக்கை 4வதாக மணந்துகொண்டார். டாக்டர் மல்லிகா அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க திட்டம் போட்டு கடத்திச் சென்று உள்ளனர். மல்லிகா அணிந்திருந்த செயின், மோதிரம், வளையல் உள்பட 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து, கீழ்பாக்கத்தில் உள்ள ஒரு கடையில் அடகு வைத்துள்ளனர்.காருடன் தலைமறைவான கார்த்திக்கை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். dinakaran.com

கருத்துகள் இல்லை: