காதல்...
பெட்ரூம்... வீடியோ என்ற தலைப்பில் நக்கீரனில் அட்டை பட செய்தி வெளியானது.
இந்த செய்தி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பாக இந்த விஷயம் பேசப்பட்டது.19
வயதுடைய பொன்.சிபி என்ற வாலிபர் பள்ளி, கல்லூரி உட்பட 30 இளம் பெண்களை
காதல் செய்வதாக ஏமாற்றி, அவர்களுடன் உல்லாசமாக இருந்ததுடன், வீடியோ எடுத்து
அப்பெண்களை மிரட்டியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட அவரது மனைவி ரெஜினா,
நக்கீரனுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அந்த பேட்டி வெளியானதும்,
திண்டுக்கல் எஸ்.பி. ஜெயச்சந்திரன், ரெஜினா கொடுத்த புகாரின் பேரில்
விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் திண்டுக்கல் மகளிர் காவல்நிலையத்தில் பொன்.சிபி, அவரது தாயார் ஹேமமாலினி, உறவினர் ராஜா ஆகியோர் மீது 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி, எஸ்.ஐ. உஷா தலைமையிலான போலீசார், தேனி பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேனி பகுதியில் உள்ள நண்பர்கள் வீட்டில் பொன்.சிபியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்து, திண்டுக்கலுக்கு கொண்டு வந்து மறைவான இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக