மத்திய வர்த்தகத்துறை மந்திரியாக
நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் தற்போது எம்.பி.யாக இல்லை. எனவே அவர்
ஆந்திராவில் அடுத்த மாதம் 3-ந்தேதி நடைபெற இருக்கும் டெல்லி மேல்-சபை
உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று தகவல்
வெளியாகி உள்ளது. ஆந்திராவில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி
ஜனார்த்தன ரெட்டி எம்.பி. மரணமடைந்தார். அந்த இடத்துக்கான இடைத்தேர்தலில், சட்டசபையில் 108 எம்.எல்.ஏ.க்களை பெற்று
தெலுங்குதேசம் பெரும்பான்மை பெற்ற கட்சியாக இருப்பதால் நிச்சயம் வெற்றி
பெறும்.
பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான தெலுங்குதேசம் தேர்தல் நடக்க உள்ள ஒரே இடத்தையும் பா.ஜனதாவுக்கு விட்டுக் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாகும் என தெலுங்குதேசம் கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த பதவிக்காலம் 2016-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதியுடன் முடிகிறது. daiylythanthi.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக