வெள்ளி, 20 ஜூன், 2014

இந்தி ஆட்சி மொழி..அதனால் முன்னுரிமை ! மத்திய அரசு வியாக்கியானம் !

டெல்லி: இந்தி ஆட்சி மொழி என்பதாலேயே அதற்கு முன்னுரிமை கொடுக்கிறோமே தவிர பிற மாநில மொழிகளை குறைவாக மதிப்பிடவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்தி மொழிக்கு முன்னுரிமை தரவேண்டும் என்பது உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு. இந்த உத்தரவுக்கு எதிராக போர்க்குரல் வெடித்துள்ளது.  திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முற்படுவதாகவும், இந்தி பேசாதவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துவதாகவும் கூறியிருந்தார். மேலும் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் ஒருமித்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திட ஆக்கப்பூர்வமான முயற்சிகள் அடுக்கடுக்காகத் தேவைப்படும் நிலையில், அவசரப்பட்டு தொடர்பு மொழிப் பிரச்னையில் ஈடுபாடு காட்டுவது கால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்தி விடும் என்றும் கருணாநிதி குறிப்பிட்டிருந்தார்.ஆஹா ஜெயாவை தர்மசங்கடத்தில் மாட்டி விட்டார்களே ?
மத்திய அரசு மறுப்பு இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அரசு, இந்தி மொழிக்கு முன்னுரிமை என்பது மற்ற மொழிகளை புறக்கணிப்பது ஆகாது என்று கூறியுள்ளது. ட்விட்டர் சமூக வலைதளத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அனைத்து இந்திய மொழிகளுக்கும் உள்துறை அமைச்சகம் முக்கியத்துவம் கொடுக்கிறது. நாட்டின் அனைத்து மொழிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கவே உள்துறை அமைச்சகம் விரும்புகிறது என்று கூறியுள்ளார். இதன் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் மற்ற மொழிகளை மட்டம் தட்டிவிட்டு இந்தி மொழியை மத்திய அரசு ஊக்குவிக்கவில்லை என்றார். அதே சமயம் இந்தி ஆட்சி மொழி என்றும், எனவே அது ஊக்குவிக்கப்பட வேண்டும்; அதற்காக மற்ற மொழிகளை குறைவாக மதிப்பிடவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: