திங்கள், 16 ஜூன், 2014

தாலிபன்கள் எச்சரிக்கை : பாகிஸ்தானை விட்டு முதலீட்டாளர்கள் உடனே வெளியேற வேண்டும் !

பாகிஸ்தானை விட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேற வேண்டும் இல்லையெனில் வன்முறைகளை சந்திக்க நேரிடும் என்று தலிபான்கள் அமைப்பு முதலீட்டார்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில்தான் அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகள் முகாமிட்டிருக்கின்றனர். இந்த அமைப்புகள்தான் பாகிஸ்தான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அண்மையில் கராச்சி விமான நிலையம் மீது மிகப் பெரும் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தலிபான்களுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கையை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டது. இத்தாக்குதலில்  ஒரே நாளில்100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.10க்கும் மேற்பட்ட பாதுகாப்புபடையினர் கொல்லப்பட்டனர்.< இந்த நிலையில் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஷகிதுல்லா ஷாகித் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது   இதைத்தானே  சாத்தான் தன்தலையில் தானே மண்ணை வாரி போடுறதும்பாங்க ? அவனவன் முதலீடு வா வாங்கிறான் இவனுங்க போ போங்கிராய்ங்க!


 பாகிஸ்தானில் முதலீடு செய்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், பன்னாட்டு அமைப்புகள் அனைத்தும் உடனே தங்களது நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு பாகிஸ்தானை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு அவர்களே பொறுப்பு ஆவார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைக்கு எதிராக அந்நாட்டு அரசுக்கும் தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். "முஜாஹிதீன்களின் பதிலடியால் ஒரு மோசமான வரலாற்று எச்சரிக்கை உங்களுக்கு கிடைக்கும். உங்களது இஸ்லாமாபாத், லாகூர் மாளிகைகள் பற்றி எரியும்" என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதனால் பாகிஸ்தான் அரசு தலிபான்கள் எச்சரிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானின் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

குறிப்பாக இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் மக்கள் கூடுகின்ற முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.மேலும் பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து வாகனங்களில் ஈடபடவேண்டும் என்று பாகிஸ்தான் அரசு போலீசாருக்கு அறிவுறைகளை வழங்கி உள்ளது.

கருத்துகள் இல்லை: