பாக்தாத்: ஈராக்கில் பயங்கரவாதிகளின் கை
ஓங்கி வருகிறது. சமீபத்தில் கடத்தி சென்ற 1700 ராணுவ வீரர்களை கொத்து,
கொத்தாகக சுட்டு கொன்றதாக இந்த பயங்கரவாத அமைப்பினர் டுவிட்டரில் தகவல்
வெளியிட்டுள்ளனர்.
ஈராக்கில் அரசுக்கு எதிராக சன்னி பிரிவு முஸ்லிம் பயங்கரவாதிகள் தொடர்ந்து
பல தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்களும், ராணுவ
வீரர்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இஷாகி நகர் மொசூல், திக்ரித், ஜலாலா,
சாதியா, ஆகியன தற்போது பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக
தெரிகிறது.
இந்நிலையில் சமீபத்தில் கடத்தி சென்ற ராணுவ வீரர்கள் ஆயிரத்து 700 பேரை சுட்டு கொன்றதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கொலைகள் திக்ரித் நகரில் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இது தொடர்பான படங்களையும் டுவிட்டரில் அப்லோடு செய்துள்ளது. ஆனால் ஈராக் அரசு சந்தேகம் மட்டும் தெரிவித்துள்ளது. இதனை உறுதி செய்ய மறுத்து விட்டது.
இந்தியர்களுக்கு எச்சரிக்கை: இதற்கிடையில் இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா அங்குள்ள நிலை குறித்து ஆய்ந்து கவனித்து வருவதாக அமெரிக்க பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக