புதன், 18 ஜூன், 2014

மும்பை பெண்ணுக்கு லோகநாதனின் இதயம் பொருத்தப்பட்ட பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மும்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற கப்பல் என்ஜினீயர் அஸ்பி வினோகர் சுமார் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. புதிய இதயம் பொருத்தப்பட்ட ஹவோபியா, நேற்று காலை மயக்கம் தெளிந்து மருத்துவர்களிடம் பேசினார். இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டரும், மலர் மருத்துவமனையின் இதயவியல் துறை தலைவருமான டாக்டர் கே.ஜி.சுரேஷ் ராவ் நிருபரிடம் கூறியதாவது:-
நேம்ஜி என்பவரின் மகள் ஹவோபியா (வயது 21) இதய நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை மலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக அவர் காத்திருந்தார். இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்டம் பழயனூரை சேர்ந்த பி.இ. பட்டதாரி லோகநாதன் சாலை விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்தார். அவரது உறுப்புகள் தானம் செய்யப்படுவது குறித்த தகவல் ஹவோபியாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. டாக்டர் குழுவினர் லோகநாதனின் ரத்த பிரிவு, உடல் எடை போன்றவைகளை ஆய்வு செய்து, இவரது இதயம் ஹவோபியாவுக்கு பொருந்தும் என்பதை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து லோகநாதனின் இதயம் மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஹவோபியாவுக்கு பொருத்தப்பட்டது.


ஹவோபியா 4 வருடங்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டு, அவரது இதயம் வேலை செய்யும் வேகம் குறைந்து 15 சதவீதம் மட்டுமே ‘பம்பிங்’ செய்து கொண்டிருந்தது. மும்பையில் உள்ள டாக்டர்கள் கைவிட்ட நிலையில், அமெரிக்காவுக்கு சென்றால் மாற்று இதயம் கிடைக்க 2 வருடம் ஆகும் என்பதால், சென்னை வந்து சிகிச்சை மேற்கொள்ள அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

மூளைச்சாவு அடைந்த லோகநாதனின் இதயம் விரைந்து கொண்டுவரப்பட்டு, ஹவோபியாவுக்கு பொருத்தினோம். தற்போது, அவர் மயக்கம் தெளிந்து நன்றாக பேசுகிறார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக தேறி வருகிறது. இன்னும் 4 அல்லது 5 நாட்கள் அவசர சிகிச்சை வார்டிலும், தொடர்ந்து ஒரு வாரம் சாதாரண வார்டிலும் சிகிச்சை பெறுவார். பின்னர் அவர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுவார். எனினும், ஒரு மாத காலம் சென்னையில் தங்கியிருந்து, அவரது உடல்நிலையை பரிசோதனை செய்த பின்னரே மும்பைக்கு அனுப்பப்படுவார்.

இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் அதிக அளவில் உடல் உறுப்பு தானங்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மூளைச்சாவு அடைகின்றனர். அவர்கள் அனைவரின் உடல் உறுப்புகளும் தானம் செய்யப்படுவதில்லை. தற்போது தான் இதுபற்றிய விழிப்புணர்வு தமிழக மக்களிடையே சிறிதளவு ஏற்பட்டுள்ளது. இன்னும் அதிகளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இந்திய அளவில் சுமார் 50 லட்சம் முதல் 1 கோடி பேர் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மாற்று உறுப்புகள் இன்றி உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு 10 முதல் 20 லட்சம் ரூபாய் செலவாகிறது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் செய்தால் ஒரு கோடி ரூபாய் செலவாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹவோபியாவின் தாயார் அர்மைடி கூறும்போது, ‘‘எனது மகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது. மீளா துயரில் இருந்து மீண்டுள்ளேன். இதற்காக இதயம் கொடுத்த லோகநாதன், அவரது தாயார் ராஜலட்சுமிக்கும், தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும், சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கும், தமிழக போலீசாருக்கும், இறைவனுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது மகள் என்னுடன் நன்றாக பேசினாள்’’ என்றார்.

உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட லோகநாதனின் உடல் நேற்று பிரேதபரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. லோகநாதன் இறந்தாலும், அவனது உறுப்புகள் மூலம் சிலர் உயிர் பெற்றது சோகத்திலும் மகிழ்ச்சியை தருவதாக உறவினர்கள் தெரிவித்தன
மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகளை தானமாக அளித்த இளைஞர் லோகநாதனின் உடல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு ஏற்பட்ட லோகநாதனின் (27) உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க அவரது தாய் ராஜலெட்சுமி முன் வந்தார். இந்நிலையில் அவரது இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகள் திங்கள்கிழமை (ஜூன் 16) தானமாகப் பெறப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் செவ்வாய்க்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்பு அவரது உடல் மதியம் 12 மணியளவில் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து அவர்களது உறவினர்கள் சிலர் கூறியது: எங்கள் மகன் இறந்துவிட்டான் என்று கவலை இருந்தாலும், அவனது உடல் உறுப்புகளின் மூலம் சிலருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்ற செய்தி எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர். தமிழக அரசின் அமரர் ஊர்தி சேவையின் மூலம் அவரது உடல் அவரது சொந்த ஊரான மதுராந்தகத்தையடுத்த பழையனூருக்கு கொண்டு செல்லப்பட்டது. dinamani.com

கருத்துகள் இல்லை: