பிரபல தெலுங்கு நடிகர் சோபன் பாபு, கடந்த 2008-ம் ஆண்டு சென்னையில் காலமானார்.< அவருக்கு நெல்சன் மாணிக்கம் சாலையில், அவரது குடும்பத்தின் பெரிய சிலை வைத்துள்ளனர். இந்த சிலை அவர்களுக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தின் ஒரு பகுதி சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், 'சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தின் பெரும் பகுதி அரசுக்கு சொந்தமானது. ஆனால் தங்கள் சொந்த இடத்தில் சிலையை வைத்துள்ளதாக சோபன் பாபு குடும்பத்தினர் பொய் கூறி வருகின்றனர். இந்த சிலை வைக்கப்பட்டதால் இந்த சாலையே கொணைடை ஊசி வளைவு மாதிரி ஆகிவிட்டது. பாதசாரிகள் நடந்து போக இடமே இல்லாமல் போய்விட்டது. எனவே சிலையை அகற்ற வேண்டும்," என்றனர்.tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக