ஜோகன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன்
மண்டேலா உடல்நலக் குறைவால் காலமானார் என்று அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி
ஜேக்கப் ஜுமா அறிவித்துள்ளார்.
நெல்சன் மண்டேலா.. 20ஆம் நூற்றாண்டின் விடுதலைக் குறியீடுகளில் ஒருவரு..
தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறையில்
இருந்தார். சிறையின் பெரும்பாலான காலத்தை ராபன் தீவில் சிறிய அறையில்
கழித்தார். தென்னாப்பிரிக்கா முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா!
1990ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கா
குடியரசு மலர்ந்தது. பின்னர் நெல்சன் மண்டேலா 1994 ஆம் ஆண்டு
தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி ஆனார். அவர் ஜனாதிபதி ஆனபின்னர் 1998ம்
ஆண்டு அந்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி,
உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
அமைதிக்கான நோபல் பரிசையும் நெல்சன் மண்டேலா பெற்றார்.
தென்னாப்பிரிக்காவில் கறுப்பினத்தை சேர்ந்த மண்டேலா முதலாவது ஜனாதிபதியாக
பதவி வகித்த போது 1999ல் பதவியை விட்டு விலகினார். பின்னர் அவர் ஜனாதிபதி
தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். மண்டேலா உலகில் அதிகம் மதிக்கப்படும்
தலைவர்களில் ஒருவராக விளங்கியவர்.
காலமானார் தென்னாப்பிரிக்கா முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா!
கடந்த ஜூன் 8ந் தேதி நெல்சன் மண்டேலா நுரையீரல் பாதிப்பு காரணமாக
பிரிட்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 3
மாதங்களாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர்
சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
தொடர்ந்து அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சில
நாட்களுக்கு முன்னர் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது
மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை
நடத்திக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார்.
தற்போது அவர் மரணம் அடைந்துவிட்டார் என அந்நாட்டு ஜனாதிபதி
தெரிவித்துள்ளார். நெல்சன் மண்டேலாவின் மரணத்திற்கு உலக நாட்டு தலைவர்கள்
இரங்கல் தெரிவித்துள்ளனர்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக