திருச்சி
மாவட்டம் ஆமூர் கொடித்தெரு பகுதியை சேர்ந்தவர் சப்பாணி. இவரது மகள்
ரஞ்சிதா (19). மண்ணச்சநல்லூரில் தனியார் பெண்கள் கல்லூரியில் பி.காம். 2ம்
ஆண்டு படித்து வந்தார்.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 23ந் தேதி
கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. 9 மாதமாக அவரை தந்தை சப்பாணி
தேடி வந்தார். இந்த நிலையில் 9.11.2013 வெள்ளிக்கிழமை ஆமூரில் உள்ள குவாரி
பகுதிக்கு சப்பாணி நடந்து சென்றார். அப்போது அவரது காலில் எலும்பு ஒன்று
தட்டியது. மகளின் சுடிதார் மற்றும் செருப்பு கிடப்பதை கண்டார். இதுபற்றி
போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்
போலீசார்
வந்ததும், செருப்பு மற்றும் சுடிதாரை காண்பித்த சப்பாணி அது தனது மகள்
மாயமான அன்று அணிந்து சென்றது என்று உறுதிபடுத்தினார். இதையடுத்து போலீசார்
எலும்பு கூடுகளை தோண்டி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ்
விசாரணையில் மாணவி ரஞ்சிதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன்
என்பவருக்கும் காதல் இருந்தது தெரிய வந்தது.
சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற ரஞ்சிதாவை பிரபாகரன் அழைத்து சென்றார். அப்போது நண்பர் குணசேகரனும் உடன் சென்றார்.
சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற ரஞ்சிதாவை பிரபாகரன் அழைத்து சென்றார். அப்போது நண்பர் குணசேகரனும் உடன் சென்றார்.
எனவே
மணல் குவாரிக்கு ரஞ்சிதாவை அழைத்து சென்ற இருவரும் அங்கு வலுக்கட்டாயமாக
பலாத்காரம் செய்யப்பட்டு கொன்று புதைத்திருக்கலாம் என்று சந்தேகம்
ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து காதலனையும் நண்பரையும் போலீசார் தீவிரமாக
தேடி வருகிறார்கள்.
மாணவி
புதைக்கப்பட்ட இடத்தில் அவர் படித்த கல்லூரியின் அடையாள அட்டை, 3 சிம்
கார்டுகள், புத்தகப்பை, டிபன் பாக்ஸ், செருப்பு, மக்கிய ஆடைகள், நோட்டு
புத்தகங்கள் ஆகியவற்றை போலீசார் கண்டு எடுத்தனர்.nakkheeran.in
ரஞ்சிதாவின் டைரியில் பிரபாகரன் மற்றும் குணசேகரன் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே
ரஞ்சிதா மாயமானதும் இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். பின்னர்
அனுப்பி விட்டனர். ஆனால் விசாரணை நடத்திய மறு நாளில் இருந்தே குணசேகரன்
தலைமறைவாகி விட்டது தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் குணசேகரன் மீது
சந்தேகம் வலுத்துள்ளது. அவரும் நண்பரும் பிடிபட்டால் திடுக்கிடும் தகவல் வெளியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக