திங்கள், 2 டிசம்பர், 2013

சோனியா காந்தி உலகின் 12-வது பணக்கார அரசியல்வாதியாம் ! நிசமாலுமா ?


காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உலகின் 12வது பணக்கார அரசியல்வாதியாக உள்ளார் என்று ஹப்பிங்டன் போஸ்ட் வேர்ல்டு என்ற இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது.  இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் 2, சிரியாவின் அதிபர் பஷார் அல்-ஆசாத் ஆகியோரை காட்டிலும் பணக்காரர் என்ற நிலையில் உள்ளார் சோனியா காந்தி என அது தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது வேட்பு மனு தாக்கல் செய்தபோது, தனக்கு ஒரு கார் அல்லது ஒரு வீடு என்று எதுவும் இந்தியாவில் இல்லை.  ஆனால், இத்தாலியில் பழங்கால வீடு ஒன்று உள்ளது.  அதன் சொத்த மதிப்பு ரூ.18.02 லட்சம் ஆகும் என குறிப்பிட்டு இருந்தார்.  அவர் தாக்கல் செய்திருந்த ஆவணங்களின்படி, ரூ.1.38 கோடி என்பது அவரது சொத்து மதிப்பாக இருந்தது.
இது அவரது மகன் ராகுல் காந்தி அறிவித்தபடியிலான சொத்து மதிப்பை விட சுமார் ரூ.1 கோடி குறைவாகும்.  சோனியா காந்தி தன்னிடம் ரூ.75 ஆயிரம் பணமாக இருப்பதாகவும் மற்றும் வங்கி கணக்குகளில் ரூ.28.61 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த செய்தியில் சந்தேகம் உள்ளது , சிலவேளை அவரது மருமகன் வதேரா அப்படி இருக்க சான்ஸ் உள்ளது 

அதனுடன், மியூச்சுவல் பண்ட் சேமிப்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலும் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியில் ரூ.12 லட்சம் அளவிற்கு பத்திரங்களும் உள்ளன என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.  மொத்தம் ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் அளவிற்கு அஞ்சல் அலுவலகங்களிலும் மற்றும் பி.பி.எப். எனப்படும் பப்ளிக் பிராவிடண்டு பண்டில் ரூ.24.88 லட்சமும் சேமிப்பில் உள்ளது.  இதேபோன்று, நகைகளில் 2.5 கி.கிராம் அளவிலான தங்கம் ரூ.11 லட்சம் மதிப்பிலும், 88 கி.கிராம் அளவிலான வெள்ளி பொருட்கள் ரூ.18 லட்சம் மதிப்பிலும் உள்ளன.
விவசாய நிலத்தில் இரு பிளாட்டுகள் ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் அதன் இடம் குறித்து ஆவணத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.  2008&09 ஆண்டுக்கான வருமான வரியாக ரூ.5 லட்சத்து 58 ஆயிரத்தை சோனியா காந்தி செலுத்தியுள்ளார்.  சொத்து வரியாக ரூ.32,512 செலுத்தியுள்ளார்.
ஆனால் உலகில் டாப் இணையதளங்களில் ஒன்றான ஹப்பிங்டன் போஸ்ட் வேர்ல்டு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிற்கு சொத்து உள்ளதாகவும் அது சுமார் -ரூ.90 ஆயிரம் கோடி மதிப்பில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.  எனினும் தலைவர்களின் பண மதிப்புகள் மற்றும் ஒப்பீடுகள் இருந்தன என்பது குறித்து இந்த அறிக்கை தெளிவாக எதுவும் கூறவில்லை.dailythanthi.com

கருத்துகள் இல்லை: