ராணுவத்தில்
லெப்டினென்ட் கலோனல் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர் மோகன்லால், ஜம்மு
காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம்களுக்கு செல்கிறார். தீவிரவாதங்களுக்கு
எதிராக காஷ்மீரில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகளை மையமாக வைத்து உருவான படம்
அரண். அதேபோல் கார்கில் போரை மையமாக வைத்து குருசேத்ரா என்ற படம் உருவானது.
முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் ரவி இயக்கிய இப்படத்தில் ராணுவ அதிகாரி
வேடத்தில் மோகன்லால் நடித்திருந்தார்.
இந்நிலையில், மோகன் லாலுக்கு
ராணுவ உயர் அதிகாரிகளின் சிபாரிசின் பேரில் மத்திய அரசால் கவுரவ
லெப்டினென்ட் கலோனல் பதவி அளிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த பதவி கிரிக்கெட்
வீரர் கபில்தேவ்க்கு வழங்கப்பட்டுள்ளது. லெப்டினென்ட் கலோனல் பொறுப்பை
ஏற்றுக் கொண்டிருக்கும் மோகன்லால், அடுத்த மாதம் காஷ்மீர் சென்று
ராணுவத்தினரை சந்திக்க உள்ளார். நடிகர் திலகனை வாழவே விடாமல் சாகடித்த இந்த மல்லு மாபியா அரபு நாடுகளில் முதலீடு உள்ளூரில் நாட்டாமை விஸ்கி விளம்பர வருமானம் இனி இந்தியாவையும் காக்கபோகிராராம்
இதுபற்றி அவர் பேஸ்புக் பக்கத்தில் கூறும்போது,ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் டிசம்பர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை பங்கேற்கிறேன். இது எனக்கு அளிக்கப்பட்டுள்ள லெப்டினென்ட் கலோனல் பதவிக்கான பணியின் ஒரு பகுதி. அங்குள்ள ராணுவ வீரர்களை சந்திக்கிறேன். அதற்கான நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் -cinema.dinakaran.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக