டெல்லி: சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு
நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழக அரசு சார்பில்
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுப்பிரமணிய பிரசாத் ஆஜரானார். நடராஜர்
கோயில் நிர்வாகத்தை அரசு மேற்கொள்வதற்கான காரணம் பற்றி விளக்கம் கேட்டனர்.
1986ல் இருந்து நடராஜர் கோயிலில் முறைகேடு நடப்பதாக புகார்கள் வந்தன.
கோயிலுக்குச் சொந்தமான 200 ஏக்கர் நிலமும் முறைகேடாக விற்கப்பட்டுள்ளது.
கோயிலில் இருந்து 86 கிராம் தங்கம் காணாமல் போய்விட்டதாகவும் புகார்
எழுந்தன. புகார்கள் தொடர்ந்ததால் கோயிலை இந்து அறநிலைய கட்டுப்பாட்டில்
கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. முறைகேடுகள் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு
உள்ளதா என அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கோயில் முறைகேடு
குறித்து ஏன் வழக்கு பதியவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி
எழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு
ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.dinakaran.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக