ஞாயிறு, 1 டிசம்பர், 2013

தெருக்களில் சிலை அதுவும் சிவாஜி /சம்பந்தியின் சிலை ?

நடிகர் திலகத்தின் சிலையை அகற்ற வேண்டுமென்று அ.தி.மு.க. அரசின் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததற்கு, திரை உலகைச் சேர்ந்தவர்களோ, நடிகர் சங்கத்தினரோ இதுவரை எதிர்ப்பே தெரிவிக்கவில்லையே என்று திமுக தலைவர் கலைஞர் 28.11.2013 வியாழக்கிழமை தனது கேள்வி பதில் அறிக்கையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதேபோல், இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத்தினர் மவுனமாக இருப்பது சிவாஜி பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்த நிலையை போக்க காங்கிரஸ் தொண்டர்களையும், சிவாஜி ரசிகர்களையும், சிவாஜி மன்றத்தினரையும் ஒன்று திரட்டி மிக விரைவில் நடிகர் சங்கத்தின் கண்டுகொள்ளாத போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் மாநில அமைப்பு செயலாளரும், அகில இந்திய சிவாஜி மன்ற கொள்கை பரப்பு செயலாளருமான கவிஞர் ராமலிங்க ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகர் சங்கச் செயலாளர் ராதாரவி,


சிவாஜி கணேசனின் சிலையை அகற்றவேண்டாம் என்று நாங்களும் கமிஷனர் அலுவலத்தில் மனு கொடுத்திருக்கிறோம். அப்போது இதுகுறித்து அவர்கள் தெளிவாகக் கேட்டனர். தமிழத்திரை உலகத்தின் முக்கியமான, தவிர்க்க முடியாத நடிகர் சிவாஜி கணேசன். இப்போது அவரது சிலை அமைந்திருக்கும் இருக்கும் இடமே முக்கியத்துவம் வாய்ந்த இடம். அப்படி அந்த சிலையை அகற்றியே ஆக வேண்டும் என்றால் தற்போதைய இடத்தைப்போல எல்லோர் கண்ணிலும் படும் வகையிலான நல்ல ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கே இந்த சிலையை வைக்க வேண்டும். போக்குவரத்து காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து நீதிமன்றம்தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்

கருத்துகள் இல்லை: