
சென்னையில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. இதையடுத்து நகரில் கொசுக்ககளை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு 5.5 லட்சம் நொச்சி செடிகள் வழங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இது தவிர மக்களுக்கு 6.5 லட்சம் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டடது.
இதையடுத்து நொச்சி செடிகள் மற்றும் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த வாரம் துவக்கி வைத்தார். ஆனால் மக்களுக்கு இதுவரை நொச்சி செடிகளும், பப்பாளி மரக்கன்றுகளும் வழங்கப்படவில்லை இது குறித்து சென்னை மாநகராட்சி வட்டாரத்தில் கூறப்படுதாவது,
நொச்சி செடிகளை வழங்க டெண்டர் மூலம் தேர்வான நிறுவனம் இன்னும் செடிகளை வழங்கவில்லை. செடிகளை டிசம்பர் 25ம் தேதி பிறகு வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனால் வரும் 25ம் தேதிக்கு பிறகே நொச்சி செடிகள் வழங்கும் திட்டம் முழுவீச்சில் நடக்கும். இந்நிலையில் பப்பாளி மரக்கன்றுகளை கொள்முதல் செய்யத் தேவையான நிர்வாக ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் மரக்கன்றுகள் வழங்கும் பணி தாமதமாகும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக