வெள்ளி, 6 டிசம்பர், 2013

வதேராவின் புகழுக்கு கெம்கா களங்கம் விளைவித்து விட்டாராம் ! அசோக் கேம்காவுக்கு குற்றப்பத்திரிகை ! நீதிக்கு தண்டனை ?


சண்டிகார்,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா. இவர், அரியானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் கொடுத்து வாங்கி, பத்திரப்பதிவு துறையை ஏமாற்றி, பல கோடி ரூபாய் சம்பாதித்ததாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா குற்றம் சாட்டினார். மேலும் ராபர்ட் வதேராவுக்கும், தனியார் கட்டுமான நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இதனை அடுத்து அவர் அத்துறையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு பாரதீய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அரியான மாநில காங்கிரஸ் அரசு ராபர்ட் வதேராவின் புகழுக்கு அசோம் மெக்கா களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளது.
அரியானா அரசு, அசோம் மெக்காவிற்கு நேற்று மாலை 7 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அனுப்பியுள்ளது. நிர்வாக சீர்கேடு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கோரி அம்மாநில முதல்-மந்திரி பூபிந்தர் சிங் கோடா உத்தரவிட்டதை அடுத்து இரண்டு மாதங்களாக குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டது. அதில் சட்ட விரோதமாக ஒப்பந்ததை ரத்து செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 15 நாட்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று அசோம் மெக்காவிற்கு அரசு உத்தரவிட்டுள்ளது  
dailythanthi.com

கருத்துகள் இல்லை: