சென்னை : "ஏற்காடு இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளருக்கு டெபாசிட்
கிடைக்க கூடாது' என, ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா,
வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:சட்டசபை தேர்தலிலும்,
உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க.,விற்கு, மகத்தான வெற்றியை அளித்தீர்கள்.
உங்களின் ஆதரவுடன், மூன்றாவது முறையாக, தமிழக முதல்வராக பொறுப்பேற்று,
பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.ஏற்காடு தொகுதிக்கு, 4ம்
தேதி, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.அ.தி.மு.க., சார்பில், மறைந்த பெருமாள்
மனைவி சரோஜா போட்டியிடுகிறார். அவரை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில்,
வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதன் மூலம் தி.மு.க., வேட்பாளர் உட்பட, மற்ற
அனைத்து வேட்பாளர்களையும், டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.அடுத்த
சில மாதங்களில், நடைபெற உள்ள, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., மகத்தான
வெற்றி பெற்று, இந்திய நாட்டின் வரலாற்றில், புரட்சிகரமான மாறுதல்களை
செய்ய, ஏற்காடு தொகுதியில், நீங்கள் அளிக்க இருக்கும் வெற்றி, ஒரு முன்
அறிவிப்பாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.இவ்வாறு, அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளில் கணக்கு இட முடியாத சாதனகைள் செய்திருக்கிறார். இவர் போட்ட திட்டங்களில் அடுத்த 50 ஆண்டுகளில் தமிழ் நாடு உலக அளவில் no 1 ஆக மாற போகுது. இவரால் ஒரு பவர் கட் சரி பண்ண முடிய வில்லை. பதவி ஆசையை பாருங்கள்.
3 ஆண்டுகளில் கணக்கு இட முடியாத சாதனகைள் செய்திருக்கிறார். இவர் போட்ட திட்டங்களில் அடுத்த 50 ஆண்டுகளில் தமிழ் நாடு உலக அளவில் no 1 ஆக மாற போகுது. இவரால் ஒரு பவர் கட் சரி பண்ண முடிய வில்லை. பதவி ஆசையை பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக