மகனை பார்த்ததும் பெற்றோர் மகிழ்ச்சியில் திளைத்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து சிறுவனிடம் விசாரணை நடத்தினர். 2 பேர் வந்து முகத்தில் துணியை அழுத்தி காரில் கடத்தியதாகவும், ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்ததாகவும் கூறினான். கடத்தல் கும்பல், சிறுவனின் முகத்தில் அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. சிறுவனை புதுவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சீனியர் எஸ்பி பைரோன்சிங் குர்ஜார் (பொறுப்பு) உத்தரவின்படி குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சிலரது புகைப்படங்களை சிறுவனிடம் காட்டி, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிறுவனின் தந்தையிடம் கும்பல் 5 முறை செல்போனில் பேசியது. அந்த நம்பரை வைத்து ஆட்டுப்பட்டி திடீர் நகர் காவலாளியான வளவனூர் அல்லிமுத்துவை (58) பிடித்து விசாரித்தனர். அப்போது, தனது சிம்கார்டை சிலநாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் பறித்து சென்றதாக கூறினார். இதன் தொடர்ச்சியாக கட்டிட பொறியாளர் கண்டமங்கலம் அழகர், கான்ட்ராக்டர் கந்தசாமி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் போலீசுக்கு துப்பு துலங்கி உள்ளது.
அதன்பேரில் கோரிமேடு பகுதியை சேர்ந்த ராமு (25), ராஜுராம் (24) உள்ளிட்ட சிலரை தனிப்படை தீவிரமாக தேடி வருகிறது. அதில் ஒருவர் போலீஸ் வசம் சிக்கியுள்ளதாக தெரிகிறது.சிறுவனை கடத்திய கும்பல் நேற்று காலை முதல் பேரம் பேசியது. ரூ.1 கோடியில் ஆரம்பித்து ரூ.10 லட்சத்தில் பேரம் முடிந்தது. பணத்தை கொடுத்து சிறுவனை மீட்கும் போது, கும்பலை சுற்றிவளைக்க வியூகம் வகுக்கப்பட்டது. இதற்கிடையில் செல்போன் நம்பரை வைத்து காவலாளி அல்லிமுத்துவை போலீசார் பிடித்தனர். தகவல் அறிந்ததும் கடத்தல் கும்பல் கலக்கம் அடைந்து சிறுவனை விட்டுவிட்டு தப்பியதாக தெரிகிறது. - tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக