செவ்வாய், 3 டிசம்பர், 2013

ஜாக்கி வாசுதேவ் சட்ட விரோதமாக கட்டிய கட்டிடங்களும் தில்லு முல்லுகளும்

jaggiஈஷா விவகாரம் என்னப்பா ஆச்சு... ? கட்டிடத்தை இடிக்கிறாங்களா இல்லையா ?"
"கட்டிடத்தை இடிக்காம காப்பாத்தலாம்னு திருட்டுச் சாமியார் என்னென்னவோ ததிங்கினத்தோம் போட்றாரு.. இதுக்கு முன்னாடி இருந்த கோவை கலெக்டர் கருணாகரன் ஐஏஎஸ், திருட்டுச் சாமியாரோட கைக்கூலியா இருந்தாரு.   எல்லா விதிகளையும் காற்றில் பறக்க விட்டுட்டு விதிகளை மீறி கட்டிய அந்தக் கட்டிடங்களை இடிக்காம, அந்தக் கட்டிடங்களுக்கு தடையில்லா சான்று வழங்கினாரு.
இப்போ வந்திருக்கிற புது ஆட்சியர் அர்ச்சனா பட்னாயக், தடையில்லா சான்று குடுக்க தயங்கறாங்க.  இது இல்லாம கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் குடியிருப்பவர்கள், கொங்கு பேரவை நிர்வாகிகள் எல்லாரும், மாவட்ட ஆட்சியரை சந்திச்சு, ஈஷா கட்டிடங்களை இடிக்கணும்னு புகார் சொல்லியிருக்காங்க.  இதையெல்லாம் மீறி தடையில்லா சான்று வழங்கினா அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்துவாங்கன்ற விஷயத்தை மாவட்ட ஆட்சியர் நல்லாவே புரிஞ்சு வச்சுருக்காங்க
"மக்களை சந்திக்கும் மாவட்ட ஆட்சியர் "நீதிமன்றத்துல நிலுவையில இருந்த வழக்கு என்ன ஆச்சு ? "
"அந்த வழக்குல அரசாங்கம் பதில் மனு தாக்கல் பண்ணாம தாமதம் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. போன வாரம், நகர்ப்புர வளர்ச்சித் துறை பதில் மனு தாக்கல் பண்ணியிருக்காங்க.  அதுல, ஈஷா மையத்தில் உள்ள அத்தனை கட்டிடங்களும் விதிகளை மீறி கட்டப்பட்டிருக்கிறது.   அந்தக் கட்டிடங்களை இடிப்பதற்கான நோட்டீஸ் ஜனவரி 2013ல் அனுப்பப் பட்டது ன்னு அந்த பதில் மனுவில் சொல்லியிருக்காங்க.. "
"ஜனவரி 2013ல் நோட்டீஸ் அனுப்பிய பிறகு, 11 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தொடர்ந்து கட்டிடங்களை கட்ட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் னு கேட்டு, புது வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட இருக்கு"
"சாமியார் பொழப்பு கஷ்டம்தான் போல இருக்கே... "

"இந்த ஆளு பின்னாடி 100 முட்டாள் போனாங்கன்னா, ரெண்டு பேர் கூடவா சுதாரிப்பா இருக்க மாட்டாங்க... "

கருத்துகள் இல்லை: