ஞாயிறு, 1 டிசம்பர், 2013

பா.ஜ., செயற்குழுவில் தி.மு.க.,வுக்கு ஆதரவு அதிகம்? நள்ளிரவு வரை விவாதம்:

லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றி, பா.ஜ.,வின் அகில இந்திய தலைமை தான் இதுவரை முடிவு செய்து வந்தது. ஆனால், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், கட்சியின் மாநிலக் குழு என்ன சொல்கிறதோ அதன்படி, கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. இதனால், பரமக்குடியில் நடந்த, தமிழக பா.ஜ., செயற்குழு கூட்டத்தில், தமிழகத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வுடன்:இம்மாதம் 27, 28ம் தேதிகளில் நடந்த செயற்குழுவில், முதல் நாள் துவங்கிய கூட்டணி விவாதம், நள்ளிரவையும் தாண்டியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளும் கூட்டணி பற்றி விவாதித்துள்ளனர். ''தமிழகத்தில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என, செயற்குழுவில் பங்கேற்ற 10 சதவீதம் பேர் கூறினர். ஆனால், தி.மு.க.,வுடன் கூட்டணி என்பதை, 40 சதவீதம் பேர் வலியுறுத்தினர் ம்ப முடியாது: வைத்திருந்தது. ஆனால், சொந்த காரணங்களுக்காக, கூட்டணியை விட்டு வெளியேறியதோடு, ஆட்சியையும் கலைக்க காரணமாக இருந்தது. அதனால், அக்கட்சியை நம்பி களம் இறங்க முடியாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
புதிய அணி:

இதன் மூலம், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க முடியாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். அதேநேரத்தில், தி.மு.க., வுடன் கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், அவர்களை நம்பி ஆட்சி அமைக்கலாம். அவர்களால், ஐந்தாண்டுகளுக்கு பிரச்னை ஏற்படாது எனவும் குறிப்பிட்டார். கட்சியின் மூத்த தலைவரான, அவரது பேச்சு, லோக்சபா தேர்தலுக்கான திசையை காட்டும்படி இருந்தது. அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளைத் தவிர்த்துவிட்டு, பா.ஜ., தலைமையில் புதிய அணியை உருவாக்குவதையும் பெரும்பாலானோர் வலியுறுத்தினர். மோடி வருகையால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரவேற்பை ஓட்டாக மாற்றுவதோடு, கட்சியை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு, பா.ஜ., தலைமையிலான அணியை, தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இல்லையேல், நம் செல்வாக்கு மூலம், பிற கட்சிகள் பயனடைந்துவிடும். அதனால், தமிழக பா.ஜ.,வுக்கு பலனில்லை என்றும் குறிப்பிட்டனர். பா.ஜ., கூட்டணிக்கு, ம.தி.மு.க., வந்துவிட்டது; பா.ம.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகளையும் அழைத்து வர வேண்டும். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்றும், சில தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com 

கருத்துகள் இல்லை: