செவ்வாய், 3 டிசம்பர், 2013

கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து சோனியா பெயர் திடீர் நீக்கம்!


டெல்லி: உலக கோடீஸ்வர அரசியல் தலைவர்கள் பட்டியலில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரை திடீரென Huffingtonpost ஊடகம் நீக்கியிருக்கிறது.
 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து சோனியா பெயர் திடீர் நீக்கம்!உலகில் டாப் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டிருந்தது. இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், அதிபர்கள் இடம்பிடித்திருந்தனர். ஆனால் அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் 12வது இடத்தை இப்பட்டியலில் இடம் பிடித்திருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதுவும் இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி சோனியா காந்திக்கு ரூ1.38 கோடிதான் இருக்கிறதாம். சோனியா பெயரில் சொந்தக் கார் கூட இல்லையாம்.
ஆனால் Huffingtonpost அவரை உலக கோடீஸ்வர தலைவர்களில் முதல் 20 இடத்தில் இடம்பிடித்திருந்தார். குறிப்பாக இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தைவிட முன்னணியில் இருந்தார் சோனியா என்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இதனை காங்கிரஸ் கட்சியும் கடுமையாக விமர்சித்து நிராகரித்திருந்தது. இந்நிலையில் திடீரென Huffingtonpost ஊடகம் 12வது இடத்தில் இருந்த சோனியா காந்தியின் பெயரை நீக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோனியாவின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்களை சரிபார்க்க முடியாத நிலையில் அவரது பெயர் நீக்கப்படுவதாகவும் குழப்பத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் Huffingtonpost தெரிவித்திருக்கிறது.
சோனியா பெயர் இடம்பெற்றது எப்படி?
சரி Huffingtonpost எதனடிப்படையில் சோனியாவின் பெயரை சேர்த்தது? http://www.celebritynetworth.com என்ற இணையதளம் அரசியல் பிரமுகர்களின் சொத்து விவகரங்களை பொதுமக்களிடம் கேட்டு அவற்றை உத்தேசமாக பதிவு செய்திருக்கிறது.
அந்த இணையதளத்தில் சோனியாவின் சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சோனியாவின் சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலராக இருக்கக் கூடும் என்றும் சில இணையதளங்களை மேற்கோள் காட்டி அது பதிவு செய்திருக்கிறது.
இந்த இணையதள தரவை வைத்து முதலில் பட்டியலை வெளியிட்ட Huffingtonpost பின்னர் சோனியாவின் பெயரை திடீரென நீக்கியும் விட்டது  tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: