ஐதராபாத்:தொடர்ந்து தனி தெலுங்கானாவை எதிர்த்து வரும் ஆந்திர முதல்வர்
கிரண்குமார் ரெட்டி, புதுகட்சி துவங்க உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது.
இதற்கான அறிவிப்பை இம்மாதம் (டிசம்பர்) 8 ஆம் தேதி வெளியிடுவார் என ஆந்திர
வட்டார தகவல்கள் தெரிவி்க்கின்றன.
காங்கிரஸ் மேலிடம் தனி தெலுங்கானா அமைப்பதற்கு எல்லா நடவடிக்கையும்
எடுத்து அமல்படுத்த முடிவும் செய்துவிட்டது. ஆனால் முதல்வராக இருக்கும்
கிரண்குமார் ரெட்டி தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம் மீது மோதல் போக்கையே
கொண்டுள்ளார்.
புலிசிந்தலா அணை திட்டம்:ஆந்திர
மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள புலிசிந்தலா அணை திட்டம் துவக்கவிழா
இம்மாதம் 8 ஆம் தேதி நடக்க உள்ளது.
இதில் பங்கேற்க உள்ள முதல்வர் கிரண்குமார் ரெட்டி, இந்த அணை திட்டத்தால் கிருஷ்ணா, மேற்கு கோதாவரி குண்டூர் மற்றும் பிராகாசம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல லட்சம் விவசாயிகளும் அவர்களின் 10லட்சம் ஏக்கர் நிலத்திற்கு இந்த அணை திட்டம் மிக்க உதவியாக இருக்கும் என்பதால் இதனை பயன்படுத்தி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை இவ்விழாவில் பங்கேற்க வைக்க முடிவு செய்துள்ளார் விவசாயிகள் நலன் தனி தெலுங்காவினால் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் நலன் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்த இந்த விழாவை பயன்படுத்தி விரும்புகிறார் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி. இந்நிலையில் விஜயவாடா தொகுதி எம்.பி. லகடபாடி ராஜகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விழாவிலே ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி புதுகட்சி அறிவிப்பை வெளியிடுவார் என நம்பப்படுகிறது..dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக