புதன், 4 டிசம்பர், 2013

பிரேமானந்தாவுக்கு தண்டனை ஜெயேந்திரனுக்கு விடுதலை; இது கம்யுனிஸ்ட் கட்சி ஸ்டைல்.

53639-6_25_625201095635123_43பிரேமானந்தா என்கிற கொடியவனை அம்பலப்படுத்தி அவனுக்குத் தண்டைனை வாங்கித் தந்ததில், சிபிஎம் கட்சியைச் சேர்ந்த முன்னணி தோழர்களால் நடத்தப்படுகிற ஜனநாயக மாதர் சங்கத்துக்கே அந்தப் பெருமை சேரும்.
ஆனால் அவர்கள் ஜெயேந்திரன், சங்கரராமனை கொலை செய்தபோதும், பல பெண்களோடு பாலியல் விவகாரங்களில் தொடர்புபடுத்தி செய்திகள் வந்தபோதும், பிரேமானந்தாவை எதிர்த்து தீவிரமாக இயங்கியதை போல் ஜெயேந்திரனை எதிர்த்து இயங்கவில்லை. ஒரு சிறிய எதிர்ப்போடே நின்றுபோனது.
இத்தனைக்கும் ஜெயேந்திரன் கொலை செய்வதற்கு முன், ‘முறையான’ துறவியாக இருந்தபோது, வேலைக்குப் போகிற பெண்களை விபச்சாரிகள் என்று சொன்னதாக ஞாபகம்.
mathimaran-wrapperசிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்களோ, ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களோ ஏன் ஜெயேந்திரனுக்கு எதிராக தீவிரமாக இயங்கவில்லை என்று தெரியவில்லை.
பார்ப்பனியத்தை அம்பலப்படுத்த கிடைத்த நல்ல வாய்ப்பை அவர்கள் நழுவவிடடார்கள். ஏதாவது ‘முக்கிய’மான காரணங்கள் இருக்கலாம். சரி பரவாயில்லை. நாம் எடுத்துக் கொண்ட விஷயத்தைவிட்டு அதிகம் வெளியில் போகவேண்டாம்.
வருண தர்மம் எப்படி சூத்திரர்களை கேவலப்படுத்தியதோ அதைதான் ஆசிரம தர்மமும்…

2008 ஆம் ஆண்டு, நான் எழுதிய
‘நான் யாருக்கும் அடிமையில்லை
எனக்கடிமை யாருமில்லை’ என்ற புத்தகத்திலிருந்து…
புத்தக தொடர்புக்கு..
‘அங்குசம்’
ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019. mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: