சனி, 14 டிசம்பர், 2013

நூறாவது நாள் மகிழ்ச்சியில் வருத்தப்படாத வாலிபர்கள்

சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி மற்றும் நடிகை ஸ்ரீதிவ்யா நடித்து புதுமுக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பாக்ஸ் ஆபீஸ் திரைப்படமாக நூறு நாட்களைக் கடந்துள்ளது. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படம் ஒரு முழு நீள காமெடி திரைச்சித்திரம் ஆகும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் நடிகர் சிவகார்த்திகேயனின் திரை வாழ்விலும் புதிய உயரத்தைத் தந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் நூறாவது நாள் குறித்து தனது மகிழ்ச்சியை இணையதளத்தில் வெளிப்படுத்தியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், இதில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவருக்கும் மற்றும் திரைத்துறை குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 6-ம்தேதி திரையிடப்பட்ட இந்தப் படம் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' மற்றும் 'எதிர் நீச்சல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம். நடிகர் சிவகார்த்திகேயனின் மூன்றாவது வெற்றிப்படமாகும்.
தொலைக்காட்சிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தும் வீஜேவாக அறிமுகமாகி திரைப்படத்துறையில் காலூன்றியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் இமானின் இசையில் பாடகராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை: