ஞாயிறு, 8 டிசம்பர், 2013

தஞ்சாவூர் மீதேன் வாயு ஆய்வுக்கு எதிர்ப்பு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்

தஞ்சை: மதுக்கூர் அருகே மீத்தேன் எரிவாயு இருப்பதாக விவசாயி நிலத்தில் யாருக்கும் தெரியாமல் கல் ஊன்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் விவசாயிகள் 11 கல்லை உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே கண்ணுக்குடி கிழக்கை சேர்ந்தவர் சிதம்பரம். விவசாயி. இவரது குடும்பத்தி னருக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தை சுற்றி நேற்றுமுன்தினம் கருங்கல் நடப்பட்டிருந்தது. நேற்று காலை அதனை பார்த்த சிதம்பரம் மற்றும் கிராம மக்கள் இதுகுறித்து விசாரித்தனர்.அப்போது, 3 ஏக்கர் நிலத்தில் பெட்ரோல் மற்றும் மீத்தேன் எரிவாயு கண்டறியப்பட்டுள்ளதாகவும், எனவே நிலத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடாது எனவும் அறிவித்து நிலத்தை சுற்றி கருங்கல் ஊன்றப்பட்டது தெரியவந்தது. மேலும் கருங்கல்லில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து சிதம்பரம், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார்.


இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் விவசாயிகள், கிராம மக்கள் ஆகியோர் வந்து நிலத்தில் ஊன்றப்பட்ட 11 கருங்கற்களை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நம்மாழ்வார் கூறும்போது, ‘‘மீத்தேன் வாயு, பெட்ரோல் உள்ளிட்டவைகளை சாகுபடி நிலத்தில் எடுப்பதை தடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்தால் விவசாய நிலம் பாதிக்கப்படும்.

நிலத்தடி நீர் வற்றிப்போகும். மேலும் அருகில் உள்ள விவசாய பம்பு செட்டுகளுக்கு தண்ணீர் கிடைக்காது. இப்பகுதியே பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும். எனவே இதை கடைசிவரை கடுமையாக எதிர்ப்போம்‘‘ என்றார்.<

கருத்துகள் இல்லை: