சனி, 14 டிசம்பர், 2013

Congress: ஆம் ஆத்மி கட்சியின் நிபந்தனைகளை ஆராய்ந்து பதில் அளிக்கப்படும்

டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின்
அரவிந்த கெஜ்ரிவால், தங்களது கட்சியின் நிலைபாடுகளை எடுத்துரைத்தார். மேலும் 10 நாள் அவகாசம் கேட்டதாக செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். மேலும் டெல்லியில் உள்ள பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ், பாஜகவிற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார். இந்தநிலையில் ஆம் ஆத்மி கட்சியின் நிபந்தனைகளை ஆராய்ந்து பதில் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது டெல்லி அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரவிந்த கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகக் கூறுகிறது. ஆனால் நான் நிபந்தனை விடுக்கிறேன். பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி ஆக்கப்பூர்வமான ஆதரவு தருவதாகக் கூறியுள்ளது. என் கடிதத்திற்கு பாஜகவின் பதில் என்ன. இரு கட்சிகளும் அனுப்பும் பதில்களை மக்கள் முன் வைப்பேன். ஆட்சி அமைப்பது குறித்து மக்கள் என்ன சொல்கிறார்களோ அதை ஆம் ஆத்மி கட்சி செய்யும் என்றார்

கருத்துகள் இல்லை: