திங்கள், 9 டிசம்பர், 2013

திமுக வெளிநடப்பு ! 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகார கூட்டுக்குழுவின் அறிக்கை தாக்க


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கையை அதன் தலைவர் பி.சி.சாக்கோ 09.12.2013 திங்கள்கிழமை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த அறிக்கை முழுமையற்றது. அரைவேக்காட்டுத்தனமானது. உள்நோக்கத்துடன் உரிய ஆவணங்களை பரிசீலிக்காமல் தயாரிக்கப்பட்ட அறிக்கை. தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நிலையில், அவரது கருத்துக்களை கேட்கவில்லை என்று கூறிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.
பின்னர் அவைக்கு திரும்பியபோது அறிக்கை குறித்து விவாதிக்கவும், அதன் மீது ஆ.ராசா கருத்துக் கூறவும் அனுமதிக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். 

கருத்துகள் இல்லை: