சிங்கப்பூரில்
சிறிய இந்தியா என்ற பகுதியில் இந்தியர்கள் அதிகம் வாழ்கின்றனர். நேற்று
முன்தினம் இரவில் அங்குள்ள ஹாம்பசையர் சாலையில் நடந்து சென்ற தமிழரான
சக்திவேல் குமார வேலு என்ற தொழிலாளி தனியார் பஸ் மோதி உயிரிழந்தார்.
இதனால்
ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்தியா,
வங்காளதேசம் உள்பட தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்த சுமார் 400 பேர் பயங்கர
ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர்.ஏராளமான
வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. 10 போலீசார் உள்பட 18 பேர் காயம்
அடைந்தனர். அதை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட 24 இந்தியர்கள் கைது
செய்யப்பட்டனர்.
சின்னதம்பி
மலேசன் (22), சின்னப்பா பிரபாகரன் (23), சிங்காரவேலு விக்னேஷ் (23),
தங்கராஜன் ஸ்ரீபாலமுருகன் (23), கருப்பையா திருநாவுக்கரசு (24), பெரியய்யா
கணேசன் (24), ரவி அருண் வெங்கடேஷ் (24), ரங்கசாமி முருகானந்தம் (24),
அன்பரசன் வேல்முருகன் (25), ராஜேந்திரன்மோகன் (25), தங்கையா செல்வகுமார்
(25),
மகாலிங்கம்
தவமணி (26), செல்வநாதன் முருகேசன் (27), அருண் கலியமூர்த்தி (28),
செல்வராஜ் கரிகாலன் (28), போஸ் பிரபாகர் (29), சின்னப்பா கோவிந்தராசு (30),
கணேசன் அசோக்குமார் (31), கிருஷ்ணன் சரவணன் (31), சின்னப்பா
விஜயரகுநாதபூபதி (32), ராமலிங்கம் சக்திவேல் (33), அழகப்பன் கந்தையா (36),
சதன் செல்வன் (39), மொங்கன்அன்பழகன் (40).
கைது
செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் சிங்கப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7
ஆண்டு சிறை தண்டனையும், பிரம்படிகளும் வழங்கப்படும் என சட்ட நிபுணர்கள்
தெரிவித்தனர்.
கலவரத்தால்
பாதிக்கப்பட்ட பகுதிகளை அந் நாட்டின் உள்துறை இணை மந்திரி ஈஸ்வரன்,
போக்குவரத்து துறை மந்திரி லுயிடக்யா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
செய்தனர்.
இதற்கிடையே
கலவரத்துக்கு மது போதையே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனவே இந்தியர்கள் வாழும் லிட்டில் இந்தியா, ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில்
மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை இன்னும் சில நாட்கள் அமலில் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக