திங்கள், 9 டிசம்பர், 2013

16 லட்சம் "நோட்டா' ! யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களின் வாக்குகள் என்ன செய்தியை சொல்கிறது

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தில்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் (நோட்டா) என்ற பிரிவை வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்துள்ளனர்.
ஏற்காடு இடைத் தேர்தலில் 4,431 வாக்காளர்கள், "நோட்டா' பிரிவைத் தேர்வு செய்து 3-ஆவது இடத்தைக் கைப்பற்றியுள்ளனர். மத்தியப்பிரதேச (230 தொகுதிகள்) மாநிலத்தில் மொத்த வாக்காளர்களில் 6.20 லட்சம் பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் (199 தொகுதிகள்) மொத்த வாக்காளர்களில் 5,88,411 பேரும், சத்தீஸ்கரில் (90 தொகுதிகள்) 4 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், தில்லியில் (70 தொகுதிகள்) 47,972 பேரும் "நோட்டா' பிரிவைத் தேர்வு செய்துள்ளது தேர்தல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது.களின் வாக்குகள் என்ன செய்தியை சொல்கிறது dinamani.com/

கருத்துகள் இல்லை: