வெள்ளி, 13 டிசம்பர், 2013

அமெரிக்காவில் விசா மோசடி: கைதான இந்திய துணைத்தூதர் தேவயாணி ! குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் விசா மோசடி: கைதான இந்திய துணைத்தூதர் தேவயாணி ஜாமீனில் விடுதலை வாஷிங்டன்: விசா மோசடியில் கைதான அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயாணி கோப்ரகேட்டை, தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணிற்கு விசா பெறுவதற்காக போலியான ஆவணங்களை சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. புகாரையடுத்து, தேவயாணி கோப்ரகேட்டை மீது விசா மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, ஜாமீன் கோரி அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் பிணைத் தொகை விதித்து அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய துணைத் தூதர் தேவயாணி கோப்ரகோட்டை மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: