தி.மு.க. தலைவர் கலைஞர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கேள்வி:
பாராளுமன்றத்தில் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த ஜெ.பி.சி. அறிக்கை தாக்கல்
செய்திருக் கிறார்களே, அந்த அறிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்
: நாடாளுமன்றத்தில் எங்கள் கழக உறுப்பினர்கள், அந்த அறிக்கைக்கு எதிராக
கருத்து தெரிவித்து வெளி நடப்பும் செய்திருக்கிறார்கள் அல்லவா? அது தான்
என்னுடைய கருத்தும் ஆகும்.
கே: தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடருமா?
ப: பொதுவாகக் கூட்டணி பேச்சுவார்த்தைகளே இன்னும் தொடங்கவில்லை. எனவே யாரோடு கூட்டணி என்பது பற்றிய பேச்சே எழவில்லை.
கே: தி.மு. கழகம் பா.ஜ.க. வோடு கூட்டுச் சேரலாம் என்ற மன நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?
ப: தி.மு. கழகத்தின் மன நிலை என்ன என்பதை வெளிப்படையாக உங்களிடம் சொல்ல முடியாது.
கே: அன்னா ஹசாரே மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறாரே? அந்தப் போராட்டத்தின் மீது நம்பிக்கை இல்லையா?
ப: நம்பிக்கையும் இருக்கிறது; ஆதங்கமும் இருக்கிறது.
கே: தி.மு. கழகப் பொதுக் குழுவின் "அஜெண்டா" என்ன? வெறும் பாராளுமன்றத் தேர்தல் மட்டும் தானா?
ப: நிலைமைக்கு ஏற்ப.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக