செவ்வாய், 26 மார்ச், 2013

பில்லி – சூன்யம் போல், ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணனையும் ஏவி விட்டோன்னு வைச்சிக்குங்க

sea
இன்றைய இளம் இயக்குநர்கள் சிறப்பாக செயல்படுவதாக நான் நினைக்கிறேன். நீங்கள் அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
-கே. வரதராஜன், கோவை.
மீனவர், தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் இவர்களைப் பற்றி இழிவாக படம் எடுக்காதீர்கள்.
மீறி எடுத்தால், நாங்க ஒன்னும் செய்ய மாட்டோம், ஜெயமோகனை விட்டு திரைக்கதை, வசனம் எழுத விடுவோம், ஜாக்கிரதை.
அப்புறம் மணிரத்திரனத்தித்திற்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும்.
மணிரத்தினம் படத்தின் மக்கள் விரோத கருத்துக்களை எதிர்த்து நாங்களும் பக்கம் பக்கமா எவ்வளவோ எழுதுனோம்; ஒன்னும் நடக்கல. உண்மையில் எங்க எழுத்த விட ஜெயமோகன் எழுத்து ‘பவர் புல்’தான்  .
அதனால் இளம் இயக்குநர்களுக்கு சொல்லிக் கொள்வது,
பில்லி – சூன்யம் போல், ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன் இந்த இரண்டு பேரையும் மாறி மாறி ஏவி விட்டோன்னு வைச்சிக்குங்க… ஒரு பய தேர முடியாது.     mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை: