வியாழன், 28 மார்ச், 2013

SRM பச்சமுத்து சிபிஐ முன் ஆஜராக வேண்டும்

சென்னை : எஸ்ஆர்எம் கல்வி நிறுவன குழும தலைவர் பி.ஆர்.பச்சமுத்து
மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள்
மருத்துவ கல்லூரி நடத்தி வருகிறோம். 2005,06 முதல் இந்த கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் உள்ளது. கஸ்டம்ஸ் அதிகாரி ஜம்போ லாலின் மகள் மானசாவை எங்கள் கல்லூரியில் சேர்க்க நன்கொடை கொடுத்ததாக சிபிஐயில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மார்ச் 25ம் தேதி நேரில் ஆஜராக சிபிஐ எங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. நாங்கள் யாரிடமும் நன்கொடை வாங்கவில்லை. எங்கள் கல்லூரி சார்பாக நிர்வாக அதிகாரி தேவையான ஆவணங்களை சிபிஐயிடம் கொடுத்துள்ளார். பதிவாளரும் சிபிஐ அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் நாங்கள் நேரில் ஆஜராக சிபிஐ வலியுறுத்தியுள்ளது. நன்கொடை புகார்களை விசாரிக்க தமிழக அரசு தனி சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த புகாரை விசாரிக்க அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. சிபிஐக்கு அதிகாரம் இல்லை.இந்த வழக்கில் நாங்கள் கைது செய்யப்படலாம் என அஞ்சுகிறோம். நாங்கள் அரசு ஊழியரல்ல. எங்களை ஊழல் தடுப்பு சட்டம் கட்டுப்படுத்தாது. நான் மூத்த குடிமகன். எனக்கு சமூகத்தில் கவுரவமான அந்தஸ்து உள்ளது. நாங்கள் கைது செய்யப்பட்டால் எங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம். சாட்சிகளை கலைக்க மாட்டோம். எங்களை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே எங்களுக்கு முன்ஜாமீன் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தங்களது முன்ஜாமீன் மனுவில் கூறியிருந்தனர். இந்த வழக்கை நீதிபதி சுப்பையா நேற்று  விசாரித்தார். மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல் வி.டி.கோபாலன், வக்கீல் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆகியோர் ஆஜராகி, ‘’நன்கொடை விவகாரங்களை விசாரிக்க சிபிஐக்கு அதிகாரம் இல்லை. மனுதாரர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருப்பது சட்டவிரோதமானது. அவர்களுக்கு முன்ஜாமீன் தர வேண்டும்’’ என்றனர்.

சிபிஐ சார்பாக வக்கீல் சந்திரசேகர் ஆஜராகி, ‘‘சிபிஐ சம்மன் அனுப்பியது உண்மைதான். சட்டப்படி சம்மனை பெற்றவர்கள் நேரில் ஆஜராக வேண்டும். சிபிஐ பிடியில் இருந்து தப்பிக்க நினைக்க கூடாது. நேரில் ஆஜராகி விசாரணைஅதன்பிறகு சிபிஐ விசாரணைக்கு தேவைப்படும்போது மனுதாரர்கள் க்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதி, ‘‘மனுதாரர்களுக்கு நிபந் தனை முன் ஜாமீன் வழங்குகிறேன். மனுதாரர்கள் வரும் திங்கள் கிழமை முதல் புதன் கிழமை வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வே ண்டும். நேரில் ஆஜராக வேண்டும்’’ என்று தீர்ப்பளித்தார். dinakaran.com

கருத்துகள் இல்லை: