ஞாயிறு, 24 மார்ச், 2013

அழகிரி ஆடறது ஆட்டமா? காங்கிரசில் தமக்கு நண்பர்களாமே

புதுடில்லி : சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியதை பிரச்னையாக்க விரும்பவில்லை என்றும், காங்கிரசில் தமக்கு நண்பர்கள் அதிகம் களாமே இருப்பதாகவும், அவர்களுடன் உள்ள உறவை துண்டிக்க முடியாது என்றும் , இதனை யாராலும் தடுக்க முடியாது என்றும் தி.மு.க,. தென் மண்டல அமைப்பு செயலாளரும், மாஜி மத்தியஅமைச்சருமான மு.க., அழகிரி கூறியுள்ளார்.
இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம் தொடர்பான பிரச்னையில் காங்., கூட்டணியில் இருந் தி.மு.க., வெளியேறியது. இதிலிருந்து 2 நாட்களில் , தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மகன், உதயநிதி ஸ்டாலின், சொகுசு கார் வாங்கியது தொடர்பாக, அவரது வீட்டில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் பண்ணை வீட்டிலும், கொகுசு கார் இருக்கிறதா என, சி.பி.ஐ., அதிகாரிகள், சோதனை நடத்தினர். அங்கு கார்கள் எதுவும் இல்லாததால், சி.பி.ஐ., அதிகாரிகள் திரும்பினர். அழகிரி திமுக ரெடியா ?

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்; ராஜினாமா கடிதத்தை தனியாக கொடுத்தது தொடர்பாக யூகங்கள் வருகின்றன. ஆனால் எனது அமைச்சகம் தொடர்பாக சில விளக்கங்களை அளிக்கவே பிரதமரை சந்தித்து பேசினேன். கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள எனது வீட்டில் சி.பி.ஐ., சோதனை நடத்தியதாக தகவல் வந்தது. சி.பி.ஐ., அதிகாரிகள் வந்து சென்ற பிறகு தான், சோதனை குறித்து தெரிய வந்தது. என்னிடம் வெளிநாட்டு சொகுசு கார்கள் எதுவும் என்னிடம் இல்லை. சி.பி.ஐ., அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தங்களது கடமையை செய்துள்ளனர். இதை நான் பிரச்னையாக்க விரும்பவில்லை.

காங்கிரசில் எனக்கு நண்பர்கள் அதிகம் உள்ளனர். எனவே அவர்கள் உறவை நான் துண்டிக்க முடியாது , இந்த உறவை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அழகிரி கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை: