
இந்த விஷயத்தில் வெட்கம் இல்லையா?'' என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: மின்வெட்டு பிரச்னையை சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டு காலம் என்பது, இப்பிரச்னையை தீர்ப்பதற்கு போதுமானது. ஆனால், தி.மு.க., ஆட்சியில், இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை. குடும்ப பிரச்னை உட்பட பல பிரச்னைகள் இருந்ததால், அதை சரிசெய்யவே தி.மு.க., விற்கு காலம் போய்விட்டது. இதனால், மாநிலத்தின் மின் பிரச்னையை தீர்க்க முடியவில்லை. இவ்வாறு விஸ்வநாதன் பேசினார்.அப்போது, ஸ்டாலின் பேசியதாவது: மின் துறை அமைச்சர், உறுப்பினரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், மற்றொன்றுக்கு பதில் சொல்கிறார்.
தேர்தல் முடிந்து,"முதல் பட்ஜெட்டில், 2012 ஆகஸ்ட்டிற்குள் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறும்' என கூறப்பட்டுள்ளது.மின்வெட்டு பிரச்னைக்கு, "மைனாரிட்டி' தி.மு.க., அரசு காரணம் என்று உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். நாங்கள், "மைனாரிட்டி' என்பதை மறுக்கவில்லை. ஆனால், "மைனாரிட்டி' அரசில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருந்தது. "மெஜாரிட்டி' அரசில், 16 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. இது வெட்கமா இல்லையா? இவ்வாறு ஸ்டாலின் பேசினார்
dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக