ஈழத்தமிழர்களின்
உரிமைகளை நிலைநிறுத்த மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து
மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறுகையில், காங்கிரஸ் கட்சியை
தனிமைப்படுத்த சதி நடப்பதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து
அவர் கூறியதாவது, இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட
இந்திய அரசு பல கோடிகளை கொடுத்து உதவி வருகிறது. இவர்கள் சம உரிமை பெற
இந்தியா முழு முயற்சி எடுத்து வருகிறது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை
நீர்த்து போக செய்து விட்டது என்பது தவறானது. >இது
உண்மையல்ல. இந்தியா முழு முயற்சி எடுத்து தீர்மானத்தை நிறைவேற்ற உதவி
செய்தது. மாணவர்களின் உணர்வுகள் மதிக்கப்படும். இந்த உணர்வுகளை பிரதமரிடம்
அழுத்தமாக தெரிவிப்போம். காங்கிரஸ்
கட்சியை தனிமைப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. இலங்கை தமிழர் விவகாரத்தில்
மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை தமிழர் நலனுக்காகவும்,
வாழ்வுக்காவும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் உணர்வுகளை
மதிக்கிறோம். மாணவர்களின் போராட்டம் தமிழ் மக்கள் மத்தியில் அல்லாமல்,
இந்திய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. மாணவர் எண்ணங்களை
நிறைவேற்றுவதில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னின்று செயல்படும் மத்திய
அரசிடம் மாணவர்களின் உணர்வுகளை நான் அழுத்தமாக பிரதிபலிப்பேன். அதன் மூலம்
இலங்கை தமிழ் மகக்கள் பாதுகாப்பும், சம உரிமை பெற்றுத்தரப்படும்
நிகழ்வும், சிங்களவர்கள் தமிழர்கள் இணைந்து வாழ்வதற்கான நடவடிக்கைகளை
மத்திய அரசு எடுக்கும்.
மாணவர்கள் தங்களது போராட்டத்திற்கு களங்கம் ஏற்பட யாரையும் அனுமதிக்கக்கூடாது. வருகின்ற நாட்களில் தேர்வு நடைபெற உள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம். மீண்டும் மாணவ நண்பர்கள் தங்களுடைய கல்வியியே கவனம் செலுத்த வேண்டும்.விளையாட்டிற்கும் அரசியலுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும், தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து முடிவு எடுக்க வேண்டும். இலங்கை வீரர்கள் சென்னையில் பங்கேற்காமல் இருக்கும் ஐ.பி.எல்., நல்ல முடிவு எடுத்திருப்பதை வரவேற்கிறேன்.நவம்பர் மாதத்தில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்து, வருகிற நாட்களில் இலங்கை அரசின் நடவடிக்கைகளில் மாற்றம் இல்லை என்றால் காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டில் நடத்த, இலங்கைக்கு எதிராக ஓட்டுப்போட்ட நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும். அதனடிப்படையில் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.இலங்கை அரசின் மீது ஐ.நா.,வில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா இரண்டாவது முறை ஆதரித்தது. இந்த செயல்பாடு, அங்கு வாழும் மக்களின் நம்பிக்கையையும், சம உரிமையையும் கொடுக்க வேண்டும் என்பதை உலக நாடுகளுக்கு நாம் தெரிவிக்கும் கருத்து என்பது தான் பொருள். இந்த தீர்மானத்துக்கு 25 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.இலங்கை தமிழ் மக்களுக்கு பல கோடி ரூபாய்கொடுத்து இந்தியா உதவி செய்கிறது. மருத்துவமனை பள்ளிக்கூடங்கள், சாலைகள், சைக்கிள், கம்ப்யூட்டர், வீடுகள் என பல திட்டங்களை தீட்டி பல திட்டங்களை செயல்படுத்தும் நாடு இந்தியா. இதற்கென இந்தியா பல கோடிகளை கொடுத்து உதவி வருகிறது. இந்த நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இந்தியா செய்யும் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு துணை நிற்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இந்த தீர்மானம் நீர்த்து போக இந்தியா தான் காரணம் என கூறப்படுவதை ஏற்க முடியாது. அது உண்மையானதல்ல. தீர்மானத்தை திருத்துவதற்கு தனிப்பட்ட நாடாக இந்தியாவிற்கு தகுதியும், உரிமையும் கிடையாது. பல நாடுகள் சேர்ந்து கொண்டு வரும் தீர்மானம் ஆகுமஇவ்வாறு அவர் கூறினார்.tamil.webdunia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக