மும்பை: ""மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்ய மாட்டேன். கோர்ட்
200 பேர் பலி: மும்பையில், 1993ம் ஆண்டு, பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., தூண்டுதலில், 13 இடங்களில் நிகழ்த்தப்பட்ட, தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில், 200க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த தாக்குதல்களுக்காக, பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆயுதங்களில், "ஏ.கே., 56' மற்றும் ஒரு பிஸ்டலை நடிகர் சஞ்சய் தத் வைத்திருந்த குற்றத்திற்காக, தொடர் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த, "தடா' சிறப்பு கோர்ட், 2007ல், அவருக்கு, ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தனர். அந்த வழக்கில், இம்மாதம், 21ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், சஞ்சய் தத்திற்கு வழங்கப்பட்டிருந்த, ஆறு ஆண்டு சிறை தண்டனை, ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஏற்கனவே அவர், ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்ததால், மீதமுள்ள, மூன்றரை ஆண்டுகளை, சிறையில் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த மாதம், 21ம் தேதிக்குள், அவர் கோர்ட்டில் சரணடைந்து, தண்டனையை தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, "வெடிகுண்டு வழக்கில் நேரடியாக தொடர்பு இல்லாத, ஆயுதம் மட்டுமே வைத்திருந்த சஞ்சய் தத்திற்கு, மன்னிப்பு வழங்கலாம்' என, பாலிவுட் நட்சத்திரங்களும், சில அரசியல் கட்சி பிரபலங்களும், பிரஸ் கவுன்சில் தலைவர், மார்க்கண்டேய கட்ஜுவும் வலியுறுத்தி வருகின்றனர்.
சந்திப்பு: ஆனால், சஞ்சய் தத் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். நேற்று அவர், மும்பை, பாந்த்ராவில் உள்ள தன் வீட்டில், பத்திரிகையாளர்களை சந்தித்து, தன் நிலையை விளக்கினார். இதற்காக, தன் தங்கையும், வடக்கு மும்பை தொகுதி, காங்., எம்.பி.,யுமான, பிரியா தத்துடன் அவர் வந்தார். அழுததால் கண்கள் சிவந்து, கண் கூடுகள் வீங்கிய நிலையில், தளர்வாக வந்தமர்ந்த சஞ்சய் தத், செயற்கைத்தனம் சுத்தமாக இல்லாமல், அழுதபடி பேட்டியளித்தார்.
அழுகை: அழுதபடியும், அடிக்கடி தலையை குனிந்தபடியும், அவர் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நான் மதிக்கிறேன். மன்னிப்பு கேட்டு நான் மனு செய்யப் போவதில்லை. கோர்ட் வழங்கியுள்ள கால அவகாசத்திற்குள், என் கைவசம் உள்ள படங்களை நடித்து முடித்து விட்டு, சிறைக்கு சென்று விடுவேன். நான் அதிர்ந்து போயுள்ளேன்; என் குடும்பமே கலங்கிப் போயுள்ளது. ஊடகங்கள் மற்றும் நாட்டு மக்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், என்னை அமைதியாக வாழ விடுங்கள். இருக்கும் கொஞ்ச நாட்களை, என் குடும்பத்தினருடன் செலவழிக்க விரும்புகிறேன்; கைவசம் உள்ள படங்களை முடித்து கொடுக்க வேண்டியுள்ளது. மன்னிப்பு கேட்டு நான் விண்ணப்பிக்க விரும்பாத நிலையில், அது பற்றி பேசி என்னை கஷ்டத்திற்கு ஆளாக்காதீர்கள். இது, என் வாழ்நாளில் மிகவும் கஷ்டமான காலகட்டம். எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. நான் என் நாட்டையும், மக்களையும் நேசிக்கிறேன்; ஐ லவ் இந்தியா. இவ்வாறு அவர் பேட்டியளித்து, கையெடுத்து கும்பிட்டவாறு, வீட்டிற்குள் சென்றார். அழுது, பேச முடியாமல் தவித்த சஞ்சய் தத்தை, அவ்வப்போது அவரின் தங்கை, பிரியா தேற்றியபடி இருந்தார்.
காங்., மவுனம்: "குற்றம் எதுவும் செய்யாத சஞ்சய் தத்திற்கு, மன்னிப்பு வழங்கலாம், அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு, 161ன் கீழ் அதற்கு வாய்ப்பு உள்ளது' என, பிரஸ் கவுன்சில் தலைவர், மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்து வருவது போல, பாலிவுட் நடிகர், சத்ருகன் சின்கா, சமாஜ்வாதி கட்சித் தலைவர், அமர் சிங், நடிகையும், ராம்பூர் தொகுதி, சமாஜ்வாதி எம்.பி.,யுமான, ஜெயபிரதா உட்பட, பலரும் வலியுறுத்தி வருகின்றனர். சஞ்சய் தத்தின் தந்தை, பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் சுனில் தத். மறைந்த இவர், காங்., கட்சி சார்பில், எம்.பி.,யாக இருந்தவர். சஞ்சயின் தாய் நர்கீசும், பாலிவுட்டின் பிரபல நடிகையே. சஞ்சய் தத்திற்கு மன்னிப்பு கொடுப்பது குறித்து, காங்., செய்தித் தொடர்பாளர், ரஷீத் ஆல்வியிடம் நேற்று கேட்ட போது, ""கோர்ட்டில் இருக்கும் விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை,'' என்றார்.
கட்ஜு விரைவில் மனு: ""சஞ்சய் தத்திற்கும், மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், ஐந்தாண்டு சிறை தண்டனை பெற்றுள்ள, 70 வயது சைபுன்னிசாவிற்கும் ஆதரவாக, மன்னிப்பு கோரி நான் விரைவில் மனுத்தாக்கல் செய்வேன்,'' என, பிரஸ் கவுன்சில் தலைவர், மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு, 72, ஜனாதிபதி வழங்கும் மன்னிப்பு குறித்தும், பிரிவு, 161, கவர்னர் மன்னிப்பு வழங்குவது குறித்தும், தெளிவாக விளக்குகிறது. சஞ்சய் தத்தும், சைபுன்னிசாவும் மன்னிக்கப்படக் கூடியவர்கள். அவர்கள் சார்பில், நான் விரைவில் மனுத்தாக்கல் செய்வேன். தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, நடிகர் சஞ்சய் தத்தை நான் சந்தித்ததில்லை. அவரிடம் பேசியதும் இல்லை. அவர்கள் இருவருக்கும் நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைக்காக உதவி செய்வேன். இவ்வாறு, கட்ஜு கூறினார்.dinamalar.com
விதித்துள்ள கால அவகாசத்திற்குள் சரணடைந்து, எஞ்சியுள்ள தண்டனை காலத்தை நிறைவு செய்வேன்,'' என, பாலிவுட் நடிகரும், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டவருமான, சஞ்சய் தத், 53, கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக