அரங்கேறியது. ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு
ஆசிரியர் பணி நியமன ஆணை! விடிய விடிய கலந்தாய்வு நடத்தி பணியிடங்கள் இறுதி
செய்யப்பட்டன.
இதுவரை கல்வித் துறை வரலாற்றில் இல்லாத ‘‘மாபெரும் புரட்சி!‘‘
36 பேருக்குத் தமிழக முதல்வரே நேரில் வந்து ஆணை வழங்கினார். மற்ற
அனைவருக்கும் அமைச்சர்கள் ஆணை வழங்கினர் என்று ஊடகங்களெங்கும் செய்தி கள்
நிரம்பி வழிந்தன. ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் நாட்டில் இத்தகைய நிகழ்வு
புரட்சிதான்.
‘‘அப்படியே, இன்னும்
இருக்கும் ஆசிரியர் தேவையையும் உடனடியாகத் தீர்த்து வைத்து விட
வேண்டியதுதானே, ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தான் லட்சக் கணக்கில் இருக்
கிறார்களே?’’ என்றொரு கேள்வி எழுந்தது.
‘‘இல்லை, அவர்களுக்கெல்லாம் இன்னும் தகுதி வரவில்லை.’’
‘‘அப்படியா, அவர்களெல்லாம் ஆசிரியர் பயிற்சியோ, ஆசிரியர் பட்டப்படிப்போ முடித்த வர்கள் தானே!’’
‘‘இருக்கலாம்.
இருந்தாலும் அவர்களுக்குத் தகுதி உண்டா - இல்லையா என்பதைத் தனித் தேர்வு
நடத்தித் தீர்மானிக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் ஆணை. அதுதான்
ஆசிரி யர் தகுதித் தேர்வு. அதில் தேர்வானவர்கள் தான் ஆசிரியர் ஆவதற்கான
தகுதி பெற்றவர்கள்.’’
‘‘ஓகோ...
பிறகெதற்கு ஆசிரியர் பட்டமோ, பயிற்சியோ? சரி, அது இருக்கட்டும். அப்படி
தமிழ் நாட்டில் எத்தனைப் பேர் ஆசிரியர் களாகத் தகுதி பெற்றவர்கள்? அதில்
எத்தனைப் பேருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது?’’
‘‘தகுதி வாய்ந்தவர்கள் அத்தனைப் பேருக் கும் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தானே இந்த விழா!’’
‘‘பரவாயில்லையே... தகுதி உடையவர்கள் அத்தனைப் பேருக்கும் வேலை என்பது சாதனை தான். எவ்வளவு பேர் மொத்தம் தேர்வு எழுதி னார்கள்?’’
‘‘6.5 லட்சம் பேர்.’’
‘‘தேர்வானவர்கள்?’’
‘‘அதுதான் சொன்னோமே... முதுநிலைப் பட்ட தாரிகள் தவிர்த்து கிட்டத்தட்ட 18 ஆயிரம் பேருக்கும் மேல்.’’
‘‘என்னப்பா இது? அப்போ மிச்சமிருக்கிற 6.25 லட்சம் பேர் ஆசிரியர் தகுதியற்றவர்களா?’’
‘‘தகுதியும், திறமையும் தானுங்களே முக்கியம். தரம் தான் நிரந்தரம். அதனால தான் இப்படி வடிகட்டி எடுத்திருக்காங்க..’’
‘‘ஆமா...
மொத்தம் எவ்வளவு பணியிடங்கள் காலி. அதுல எவ்வளவு பேர் நிரப்பப்பட்டி
ருக்காங்க... எந்தெந்தப் பிரிவுல எவ்வளவு பேர் வேணும். எவ்வளவு பேர்
தேறியிருக்காங்க...’’
‘‘அது தெரியலிங்களே....’’
‘‘அட...
வேலைக்குப் போடுறதுன்னா... அதுக்கு முன்னாடியே அறிவிக்கை ஒன்னு முறைப்படி
கொடுப்பாங்கப்பா... எவ்வளவு இடங்கள் காலி? அதில் திறந்த போட்டி எவ்வளவு?
பிற்படுத்தப் பட்டோருக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோ ருக்கு எவ்வளவு?
தாழ்த்தப்பட்டோர் எவ்வளவு? அதில் பெண்கள் எவ்வளவு? மாற்றுத் திறனாளி கள்
எவ்வளவு? எல்லாமே விவரமா வந்திருக் குமே! அதைப் பார்த்தா தெரிஞ்சுடுமே!‘‘
‘‘அது வந்து... அது வந்து.... அது வரலீங்களே!’’
‘‘எது வந்தது... எது வரல?’’
‘‘தேர்வானவங்களுக்கெல்லாம் வேலை கொடுத்தாச்சுங்க... ஆனால் வேலை கொடுக் கிறதுக்கான அறிவிக்கை வரலீங்க...’’
‘‘அட.. நீ தெரியாம சொல்றப்பா... கண்டிப்பா வந்திருக்கும். சட்டப்படி அது வராம வேலையே போட முடியாதுப்பா!’’
‘‘இல்லீங்க... எவ்வளவு இடம் காலியாயி ருக்குங்கிற அறிவிக்கை வரவே இல்லீங்க’’
‘‘என்ன?’’
இந்த அதிர்ச்சிதான் ஆரம்பம்!
ஆசிரியர்
தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. முடிவு வெளிவந்தது. கொஞ்சம் பேர் தான்
தகுதியானார்கள். பாவம், போனால் போகுதே என்று மற்றவர்களுக்கு மட்டும்
மறுதகுதித்(!?)தேர்வு நடத்தப்பட்டது. முடிவு வெளிவந்தது.
அதில் தகுதி மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கெல்லாம் பணிகள் வழங்கப்பட்டன.
இதுவரை இல்லாத புரட்சி இது!
- என்று 'சுபம்' போட்டு முடித்துவிட்டார்கள் கதையை!
ஆனால்,
இதற்கு நடுவே தொக்கி நிற்கின்றன ஆயிரம் கேள்விகள்? அதற்கெல்லாம் யார் விடை
சொல்வார்? 21 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன என்றால், திறந்த போட்டியில்
எவ்வளவு பேர் தேர்வு செய்யப் பட்டனர்?
பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர்?
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர்?
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் எவ்வளவு பேர்?
ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு உண்டே?
பிற்படுத்தப்பட்டோரில் இஸ்லாமியர் எவ்வளவு பேர்?
தாழ்த்தப்பட்டோரில் அருந்ததியர் எவ்வளவு பேர்?
மாற்றுத் திறனாளிகள் எவ்வளவு பேர்?
இன்னும் இருக்கும் இட ஒதுக்கீட்டு வாய்ப்புப் பெற்றோரெல்லாம் எவ்வளவு பேர்?
‘‘அப்படியெல்லாம் கிடையாது சார்? தகுதியான வங்களுக்கெல்லாம் வேலை. அதில எல்லா பிரிவினரும் இருக்காங்க ’’இதுதான் பதில்.
தகுதி, தகுதி என்று மீண்டும் மீண்டும்
இவர்கள் அழுத்திச் சொல்லும்போதே இதில் ஏதோ மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கிறது
என்று பொறி தட்டவில்லையா?
‘‘தகுதியானவர்களுக்கெல்லாம் வேலை. அதில் அனைத்துப் பிரிவினரும் இருக்கிறார்கள்.’’
சரி, தகுதிக்கான அளவுகோல் என்ன?
தகுதித் தேர்வில் தேர்வானவர்கள் பட்டியல்
எங்கே? அதில் இட ஒதுக்கீடு அளவுப்படியே தேர்வானவர்கள் எண்ணிக்கையும்
இருக்கிறதா? இல்லை, மிகச் சரியாக அவரவர் இட ஒதுக்கீடுக்கேற்ப
தேர்வாகியிருக் கிறார்களா?
தேர்வு என்று முடிந்தால் அதற்கு முடிவு என்று வெளியிடப்பட்டிருக்க வேண்டுமே? எங்கே அது?
வேலைவாய்ப்புப் பெற்றோரின் இடஒதுக்கீட்டு விவரம் என்ன? என்ற கேள்விகள் நம் முன் எழும்.
ஆனால், இதற்கெல்லாம் மூலமான கேள்விகள்
இன்னும் இருக்கின்றன. ஆனால், அப்படியொரு கேள்வியையோ, அதை எழுப்புவதற்கான
வாய்ப்பையோ மறந்தும் ஏற்படுத்தவில்லை, ஆசிரியர் தேர்வு வாரியம்.
அந்தக் கேள்விதான். ‘‘ஒவ்வொரு பிரிவினருக்கு மான, கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு?’’ என்பது. இட ஒதுக்கீட்டை சந்தேகமற உறுதி செய்யும் ஒரே அளவுகோல் கட்ஆப் மதிப்பெண்கள்தானே!
சமூகநீதியின் பிறப்பிடமான தமிழ்நாட்டில்
நடந் திருக்கும் மாபெரும் சமூகநீதி மோசடி அங்கேதான் தொடங்குகிறது.
ஒட்டுமொத்தமாக சமூகநீதிக்குக் குழி தோண்டியிருக்கும் இந்த பணி நியமனத்தில்
நடந்திருப்பது என்ன?
தகுதித் தேர்வின்மூலம் இட ஒதுக்கீட்டு
அளவு கோலின்படி ஆசிரியர் தகுதி கிடைத்திருக்க வேண்டிய 2 லட்சத்திற்கும்
அதிகமான ஆசிரியர் படிப்பு முடித்தவர்களின் எதிர்காலத்தை இருளாக்கியது யார்?
நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து ஆணை
வழங்கிய பின்னும், அடுத்த மாதமே அந்த ஆணையைக் குப்பைத் தொட்டிக்கு
அனுப்பிவிட்டு, அதேபோன்ற புதிய மோசடியை அரங்கேற்றும் தைரியம் எங்கே இருந்து
வந்தது?
மறுக்க முடியாத ஆதாரங்களுடன் மேலும் விவரங்கள் நாளை 'விடுதலை'யில்!
சமூகநீதியில் அக்கறை கொண்டோரே, இந்த மாபெரும் மோசடிக்கெதிராக களம் காணவேண்டிய நாள் தொடங்குகிறது, எதிர்பாருங்கள்! விடுதலை.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக