கல்யாணம் செய்யலாம். அப்போதும் கல்யாணம் நின்று போவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், தண்ணி இல்லாத ஊர்ல மாப்பிள்ள வேண்டாம் என்று குஜராத் கிராம மக்கள் பல திருமணங்களை ரத்து செய்து விட்டனர். குஜராத் மாநிலம் அம்ரேலி அருகில் உள்ளது திதான் கிராமம். இங்குள்ள பல வாலிபர்கள் கல்வி உள்பட தகுதிகளுடன்தான் இருக்கின்றனர். ஆனால், திருமணத்துக்கு மட்டும் அவர்கள் தகுதி இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் வசிக்கும் கிராமம் அப்படி.. திதான் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை. 5 கி.மீ. தூரம் காலி குடங்களை சுமந்து சென்று கிடைக்கும் சொற்ப நீரை சுமந்து வர வேண்டிய நிலை. இதனால் அக்கம் பக்கத்து கிராமத்தில் உள்ள மக்கள், திதான் கிராம வாலிபர்களுக்கு பெண் கொடுக்க மறுக்கின்றனர். என் மகள் அந்த கிராமத்து பையனை திருமணம் செய்து கொண்டு கஷ்டபடுவதை பார்க்க முடியாது என்கின்றனர்.
12 நாட்களுக்கு ஒரு முறை இங்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அது கூட ஒரு சில இடங்களுக்கு மட்டும்தான் கிடைக்கிறது. அதனால் கடந்த 2 மாதங்களில் மட்டும் 4 திருமண நிச்சயதார்த்தம் நின்று போயுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு இங்கு சராசரியாக 93 சதவீதம் மழை பெய்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு 56 சதவீதமாக குறைந்து விட்டது. அதனால் அம்ரேலி, திதான் உள்பட பல கிராமங்கள் காய்ந்து கிடக்கின்றன. இதுகுறித்து திதான் கிராம பஞ்சாயத்து தலைவர் நாது ரதோட் கூறுகையில், எங்க ஊர் பசங்களுக்கு யாரும் பொண்ணு தர மாட்டேங்கறாங்க. அந்தளவுக்கு தண்ணி பிரச்னை பெருசா இருக்கு. புதுசா கெணறு, போர்வெல் போடுங்கன்னு அதிகாரிங்க கிட்ட சொல்லி சொல்லி பாத்தோம். எதுவுமே நடக்கல என்று பரிதாபமாக கூறுகின்றனர். இந்த பிரச்னையால் பல ஆண்டுகள் திருமணம் ஆகாமல் வாலிபர்கள் பலர் பேச்சிலர்களாக காலம் கடத்தி வருகின்றனர். இதற்கு மேல் தாங்காது என்று நினைத்தவர்கள், சூரத் போன்ற பல இடங்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர். .tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக