சுதந்திரமா, சமத்து வமா என்ற தலைப்பில்
தனியார் பத்திரிகை நிறுவனம் நடத்திய கருத்தரங்கு கொல்கத்தாவில் நேற்று
முன்தினம் நடந்தது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்,
கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் சச்சின் பைலட், பா.ஜ. மூத்த தலைவர் ரவி
சங்கர் பிரசாத் உட்பட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டு தங்களின் தனிப்பட்ட
கருத்து களை தெரிவித்தனர். கருத்தரங்கில் சல்மான் குர்ஷித் கூறியதாவது:
முகநூல், டுவிட்டர் போன்ற சமூக இணைய
தளங்களின் தாக்கம் தற்போது மிக வலுவாக உள்ளது. ஏனென்றால் நாம் சம
உரிமையுடன் வாழ்கிறோம். இந்த சமத்துவம் காரணமாகத்தான் சமூக இணைய தளங்களில்
நாம் நமது கருத்து களை சுதந்திரமாக தெரிவிக்கிறோம்.
இந்த சுதந்திரத்துக்கும் ஒரு கட்டுப்பாடு
தேவை. சமத்துவம் ஒழுங்குமுறைப்படுத்தப்படு கிறதா என்பதை நான் அறியவில்லை.
ஆனால் ஒவ்வொரு சுதந்திரமும் ஒழுங்குமுறைப்படுத்தப் படுகிறது. நமது அரசியல்
அமைப்பு சட்டத்தில், பேச்சு சுதந்திரம் உட்பட எல்லா சுதந்திரத்துக்கும்
கட்டுப்பாடுகள் உள்ளன. உண்மையான இந்தியர் கள் அனைவரும் அதைப் படித்து
தெரிந்து கொள்ள வேண்டும். - இவ்வாறு குர்ஷித் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக