சென்னை: "" தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான தண்டனை குறைப்பு
போதாது,'' என, ஸ்டாலின் கூறினார். சட்டசபையில், தே.மு.தி.க., -
எம்.எல்.ஏ.,களின் தண்டனை காலம், ஆறு மாதமாக குறைக்கப்பட்டது. இந்த தண்டனை
குறைப்பு போதாது என்று கூறி, மு.க. ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., -
எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம்
ஸ்டாலின் கூறியதாவது:
சபாநாயகர், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், ஓராண்டு காலம் நீக்கம் செய்யப்படுகின்றனர் என அறிவித்தார். இதற்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. தண்டனையை குறைக்க வேண்டும் என, முதல்வருக்கு கோரிக்கை வைத்து, குடியரசு கட்சி எம்.எல்.ஏ., தமிழரசன் விரிவாக பேசுகிறார்.
ஏற்கனவே திட்டமிட்டபடி, முதல்வரும் தண்டனை காலத்தை ஆறு மாதமாக குறைக்கலாம் என பரிந்துரைத்தார். தொடர்ந்து, சபாநாயகர் தண்டனையை குறைத்து இருக்கிறார். இந்த தண்டனையும் ஏற்க முடியாது. இதுவும், ஆறு எம்.எல்.ஏ.,க்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. இவ்வாறு அவர் கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக