செவ்வாய், 26 மார்ச், 2013

6 தேமுதிக MLAக்கள் ஒரு வருடத்துக்கு சஸ்பெண்ட்!


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை-: எம்எல்ஏவை தாக்கிய விவகாரம் தொடர்பாக தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் ஒரு வருடத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சட்டசபையில் கடந்த பிப்.8ம் தேதி தேமுதிக எம்எல்ஏ தமிழழகன் பேசும்போது, ‘முதல்வர் ஜெயலலிதாவை நான் ஒருமுறை சந்தித்து பேசினேன். அதன்பிறகு எனது தொகுதிக்கு நிறைய சலுகைகள் கிடைத்துள்ளது. பலமுறை சந்தித்தால் எனது தொகுதி தமிழகத்திலேயே முதன்மை தொகுதியாக மாறிவிடும். மற்ற தேமுதிக எம்எல்ஏக்களும் என் வழியை பின்பற்ற வேண்டும்Õ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேமுதிக எம்எல்ஏக்கள், தமிழழகனை தாக்க பாய்ந்தனர். அப்போது அருகில் இருந்த தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ மைக்கேல் ராயப்பனை தேமுதிக எம்எல்ஏக்கள் தாக்கினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடத்த அவை உரிமை குழுவுக்கு அனுப்பி வைப்பதாகவும் நடந்த சம்பவங்களை வீடியோவில் பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
அன்றைய தினத்துடன் சட்டமன்ற தொடர் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கியது. சட்டமன்ற உரிமை குழுவின் தலைவரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், சட்டசபையில் உரிமை குழு அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘அவை உரிமை குழு தலைவர் தாக்கல் செய்த தீர்மானம் இன்றே, இப்போதே ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட வேண்டும்Õ என்றார். இதையடுத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தேமுதிக, திமுக, மார்க்சிஸ்ட், புதிய தமிழகம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, ‘இந்த தீர்மானம் குறித்து விவாதித்து நிறைவேற்ற வேண்டும்Õ என்றனர். அதற்கு சபாநாயகர், ‘இதில் விவாதிக்க ஒன்றும் இல்லை. கடந்த பிப். 8ம் தேதி சில உறுப்பினர்கள் இந்த சட்டசபையில் கீழ்த்தரமாக நடந்து கொண்டதை எல்லோரும் பார்த்தோம். உறுப்பினர்களை தாக்குவதை அனுமதிக்க முடியாதுÕ என்றார். பின்னர், அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தனபால் படித்தார். அவர் கூறியது: அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி தேமுதிகவை சார்ந்த சந்திரகுமார், பார்த்தசாரதி, முருகேசன், நல்லதம்பி, செந்தில்குமார், அருள்செல்வன் ஆகிய 6 தேமுதிக உறுப்பினர்கள் இன்றிலிருந்து ஒரு வருட காலத்துக்கு அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள். இந்த காலத்தில், அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், எந்தவிதமான ஆதாயத்தையும், ஊதியத்தையும், சலுகைகளையும், தகுதிகளையும் பெற முடியாது. எனவே தேமுதிக உறுப்பினர்கள் 6 பேரும் அவையை விட்டு வெளியேற வேண்டும் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக, திமுக, மார்க்சிஸ்ட், புதிய தமிழகம், காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.  tamilmurasu.org

கருத்துகள் இல்லை: