
சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டியை மாற்றினால் அதை கேரளத்தில்
நடத்தத் தயார் என்று அம் மாநில முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க தமிழக முதல்வர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறியது: ஐபிஎல் போட்டியை நாங்கள் வரவேற்கிறோம். கொச்சியில் ஐபிஎல் போட்டியை நடத்தும் அவசியம் ஏற்பட்டால் கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு மாநில அரசு முழு ஆதரவு கொடுக்கும். போட்டியை நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும்' என்றார். முன்னதாக கேரள கிரிக்கெட் சங்க செயலர் டி.சி.மேத்யூ தலைமையிலான குழு, செவ்வாய்க்கிழமை மாலை உம்மன்சாண்டியை சந்தித்து 6-வது ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு ஆதரவு தருமாறு கேட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக