
தகவல் பரிமாற்றத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற இரு ஜாம்பவான்களாக இவற்றைக் குறிப்பிடுவதில் எவருக்கும் ஆட்சேபனை இருக்கப் போவது இல்லை.
குறிப்பாக அரபு வசந்தத்தில் இவற்றின் பங்குகள் அளப்பரியன. மத்திய கிழக்கில் சில நாடுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இவை பெருந் துணையாக இருந்தன.
பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இரண்டும் பொதுவாக சமூக வலையமைப்புகள் என வரைவிலக்கணப்படுத்தப்பட்டாலும், மேலெழுந்தவாரியாக ஒரே மாதிரியானதென குறிப்பிடப்பட்டாலும் இவை இரண்டிற்கும் இடையே பல வித்தியாசங்கள் உள்ளன.
இவை இரண்டினதும் நோக்கம் என்னவோ தகவல் பரிமாற்றம், இணையத்தோடு இணைந்திருத்தல் என தெரிவிக்கப்பட்டாலும் இவை அனைத்தும் ஒவ்வொரு தனிநபர் தகவல்களையும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதையே அடிப்படை நோக்காகக் கொண்டவை என்பது பரவலாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.
பொதுவாக சமூகவலையமைப்புகள், உலாவிகள் ஆகியன பாவனையாளர்களின் தகவல்களை அறுவடைசெய்யும் 'Data harvesting' என்று சொல்லக்கூடிய நமது தகவல்களை நம்மை அறியாமல் திருடும் குழுக்களே என்பது தொழிநுட்ப உலகத்தில் புதிய தகவல் அல்ல.
இவற்றுக்கும் ஒரு படி மேலே சென்ற விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாங்சே பேஸ்புக் மற்றும் டுவிட்டர் அமெரிக்க உளவு நிறுவனங்கள் என பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
மத்தியகிழக்கில் புரட்சி , அமெரிக்க உளவாளிகள் என குற்றஞ்சாட்டப்படும் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இரண்டும் அதில் செலுத்திய தாக்கம் என்பவற்றை தேடி ஆராய முற்பட்டால் ஒருவேளை அசாஞ்சேயின் குற்றச்சாட்டுக்கான விடை கிடைத்தாலும் கிடைக்கலாம்.
ஆனால் தற்போது நாம் தரப்போகும் செய்தி இது தொடர்பானதல்ல இது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இடையே நிலவும் போட்டித் தன்மை தொடர்பானதாகும்.
ஆம், சமீப காலமாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களிடையே போட்டித் தன்மை அதிகரித்து விட்டது.
நாம் ஆரம்பத்தில் கூறியது போல இரண்டும் வெவ்வேறான தளத்தில் பயணித்த போதிலும் இவற்றின் நோக்கம் என்னவோ ஒன்றுதான். veerakesari.lk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக